தற்பொழுது விதைச் செலவினைக் குறைப்பதற்காக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ விதை கரும்பிலிருந்து தேவையான ஒரு பரு சீவல்களாக மாற்றினால் 50 கிலோ எடையளவிற்குள் இருக்கும். மீதமுள்ள 350 கிலோ கரும்பு ஆலைக்கு அனுப்பிவிடலாம்.
ஒரு பரு சீவல்களைத் பரு பெயர்த்தெடுக்கும் கருவி மூலம் பெயர்த்தெடுத்து குழிதட்டுகளில் வளர்த்து 30 நாட்களில் ஐந்து முதல் ஆறு இலைகள் உள்ள கரும்பு நாற்றுகளாக நடவு வயலில் 5’x2’ இடைவெளியில் நட வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 4400 பருக்கள் போதுமானது.
இதில் சராசரியாக 80 சதம் முளைப்பு திறன் என்று வைத்துக்கொண்டால் ஒரு ஏக்கருக்கு 3520 குத்துகள் இருக்கும்.
ஒரு குத்துக்கு 12 கரும்புகள் வீதம் கணக்கிட்டால் ஒரு ஏக்கரில் 42200 கரும்புகள் வயலில் இருக்கும்.
இடைவெளி அதிகமாக விட்டு நடுவதால் தனிக்கரும்பின் எடை இரண்டு கிலோ வரை இருக்கும். ஆக ஒரு ஏக்கருக்கு 84 டன் என்றளவில் கரும்பு விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐந்து மீட்டர் நீளத்தில் 96 கரும்புகள் அல்லது குத்துக்கு 12 கரும்புகள் இருந்தால் 84 டன்கள் வரை விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது.
பார்களில் இருபரு கரணை நடவு – 45000 குழிமுறை நடவு முறை 56000
நான்கு அடி இடைவெளி பார்களில் நடவு செய்தல் (நீர்தேக்க முறையில் பாசனம்) 40500
நான்கு அடி இடைவெளி பார்களில் நடவு செய்தல் (உர பாசனம்) 40500
ஒரு பரு சீவல் நாற்று நடவு முறை (உரப்பாசனம்) 42200 எனவும், சேலம் மாவட்டம், மேச்சேரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எஸ்.ஷீரின் மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.