December 6, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் தொடங்க கிராமப்புற இளைஞர்களுக்கு தீவன உற்பத்தி பயிற்சி

புதுக்கோட்டை, ஜுலை 26

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்பும் கிராமப்புற இளைஞர்களுக்கு தீவன உற்பத்தி மற்றும் மேலாண்மை குறித்து ஒரு வார பயிற்சி நடைபெறுவதாக திட்ட இயக்கு நர் (அட்மா) மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் (பொ), வி.எம். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், றீவீயூக்ஷு திட்டத்தின் கீழ் மத்திய வேளாண் அமைச்சகத்தின் நிதி உதவியுடன் ஹைதராபாத் மேனேஜ் மற்றும் குடுமியான்மலை, சமிதி நிறுவன வழிகாட்டு நெறிமுறைகளின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்Ø தாடங்க விரும்பும் கிராமப்புற இளைஞர்களுக்கான தீவன உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை குறித்த ஒரு வார பயிற்சி வரும் ஆகஸ்ட் – 2024 மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் கிராமப்புற இளைஞர்கள் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களாகவும் குறைந்தது ஐந்தாம் வகுப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிஒருவாரத்திற்குஆகஸ்ட் -2024 மாதம் மூன்றாவது வாரத்தில் 28 கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் தொடர்ந்து ஒரு வாரம் கலந்து கொள்ளும் கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வங்கிக் கடன் பெற்று Ø தாழில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

எனவே, இப்பயிற்சியில் கலந்துØ காள்ள விரும்பும் புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புற இளைஞர்கள் உடனடியாக தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் முன்னுரிமை பதி வேட்டில் பதிவு செ ய்து பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குநர் (அட்மா) மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் வி.எம்.ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.