மண் வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற ஆலோசனை

புதுக்கோட்டை, ஜூலை 4 புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், எதிர் வரும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ள இருக்கும் விவசாயிகள் தரிசாக உள்ள தங்கள் நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு அல்லது சணப்பு விதைகளை விதைத்து மடக்கி உழுவதால் மண்வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவித்துள்ளார். மேலும், பசுந்தாள் உரப்பயிர் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ பசுந்தாள் உரப்பயிர் விதைகளை விதைக்க […]

வாழையில் குலைகள் பெரிதாக்க தொழில்நுட்பம்

திண்டுக்கல், ஜூலை 4 உலகின் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல பகுதிகளில் மிக முக்கியமான பழப்பயிர் வாழையாகும். மேலும் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியாவில் மிக முக்கிய பழப்பயிராக வாழைப்பழம் விளங்குகிறது. தமிழகம், கேரளா, கர்நாடக, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், ஆகிய மாநிலங்கள் வாழை உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் கொண்ட வாழையின் வளர்ச்சிக்குப் பெருமளவு நீர் மற்றும் ஊட்டச்சத்துத் தேவைப்படுகிறது. நீர் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு […]

நாளந்தா வேளாண்மைக் கல்லூரியில் மரம் நடும் விழா

திருச்சி, ஜூலை 4குஐராத் மாநிலத்தைத் தலைமை நிலையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதுல் நிறுவனம் வேளாண் சார்ந்த இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் தலைசிறந்து விளங்கும் ஒரு நிறுவனமாகும். அதுல் நிறுவனத்தின் 78 ஆம் ஆண்டு துவக்க விழாவினையொட்டி இந்தியா முழுவதும் சுமார் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டு அதனை செயல்படுத்தி வருகின்றனர். மேலும் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் நாட்டின் பசுமை வளர்ச்சிக்கு உறுதுனையாகவும் இருக்கிறார்கள். இந்த ஒரு இலட்சம் மரக்கன்றுகள் ஒரு நாளில் நடும் […]

ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த விவசாயிகள் பயிற்சி

விருதுநகர், ஜூலை 4 விருதுநகர் வட்டாரம், அட்மா திட்டத்தின்கீழ் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி – ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் விருதுநகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கமிலஸ்.சி.லீமாரோஸ் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 2024-25ம்ஆண்டு ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியினை வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் சுமதி, கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் அவர் கூறுகையில், ஒருங்கிணைந்த பண்ணையம், பிஎம்கிசான் விவசாயிகளுக்கு உதவித் தொகை, விவசாய கடன் […]

விதைகளை பரிசோதிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை, ஜூலை 3 தென் மேற்கு மழை தொடங்கி இருப்பதால் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகள் விதைப்பிற்கு முன் விதைகளின் தரத்தினை பரிசோதனை செய்து கொள்ளலாம். விதைகளை பரிசோதனை செய்வதன் மூலம் இடுபொருட்கள் செலவினை குறைத்து தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். குறைந்த செலவில் அதிக மகசூல் பெற விதைபரிசோதனை செய்தபின் விதைகளை பயன்படுத்துவதன் மூலம் விதைகளின் முளைப்புதிறன் குறைபாடு இல்லாமல் இருப்பதையும் விதைகளில் பிற இரக விதைகள் உள்ளதா என்பதை அறிவதன் […]