# AGRI DOCTOR ## Posts - [](https://agridoctor.in/4081-2/) - [](https://agridoctor.in/4044-2/) - [](https://agridoctor.in/4042-2/) - [](https://agridoctor.in/4040-2/) - [மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/): இராமநாதபுரம், ஆக.9 இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரம், வேளாண்மை துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு உள்ளான விவசாயிகள் பயிற்சி மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி வேளாண் விரிவாக்க மையம் உச்சிப்புளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முனைவர் வள்ளல் கண்ணன் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம் முன்னிலை வகித்தார். பானுமதி வட்டார தொழில்நுட்ப மேலாளர் உச்சிப்புளி துறை அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்களை வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடியில் ரகம் தேர்வு விதை அளவு,பயிர் இடைவெளி,ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, மானாவாரி நிலக்கடலை சாகுபடிக்கு வி ஆர் ஐ-9 மற்றும் டி எம் வி-13 ஆகிய ரகங்கள் மிகவும் ஏற்றது. வி ஆர் ஐ -9. ( 110) நாட்களிலே அறுவடைக்கு தயாராகி விடுகின்றது. மேலும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. இது போன்ற ரகங்களை […] - [காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்](https://agridoctor.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0-%e0%ae%9a/): திண்டுக்கல், ஆக.9 திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டம், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கை முழு மானியத்தில் வழங்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் அறிவுரையின் படி காயர் பித் கம்போஸ்ட் பேக்கை பன்றிமலை முன்ளோடி விவசாயி திலிப்பனுக்கு கொடுத்து அதன் பயன் மற்றும் சாகுபடி முறையினை எடுத்து கூறி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் கார்த்தி, உதவி விதை அலுவலர் பூபதி, உதவி வேளாண்மை அலுவலர் செந்தில், உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜா, காந்திகிராம வேளாண் பல்கலைக்கழக கிராம தங்கல் மாணவிகள் புவனேஸ்வரி , பவானி, அபிதா தேவி, அக்ஷிதா மற்றும் வட்டார தொழில்நுட்ப ¼ மலாளர் சுகன்யா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். - [மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95/): புதுக்கோட்டை, ஆக.9 புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் பயிர் சாகுபடியில் உயிர்ம இடுபொருட்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கு வேளாண் கழிவுகளை மறு சுழற்சி செய்திடும் பொருட்டு மண்புழு கம்போஸ்ட் உரம் தயாரிக்கும் முறை குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) வி.எம். ரவிச்சந்திரன் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு திட்டத்தின் வாயிலாக உயிர்ம வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிர் சாகுபடிக்கு பின்பு கிடைக்கப்பெறும் வேளாண் கழிவுகள் மற்றும் களைகள் ஆகியவற்றை மறு சுழற்சி செய்திடும் வகையில் கம்போஸ்ட் உரம் தயாரித்து பயிர்களுக்கு இடலாம். இதனால் மண்வளம் மேம்படுவதோடு பயிரின் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பயிர் கழிவுகளை மறு சுழற்சி செய்து கம்போஸ்ட் தயாரித்திட மண்புழு முக்கிய பங்கு வகிக்கிறது. மண்புழு கம்போஸ்ட்மண்புழுவை விவசாயியின் நண்பரென்று தொன்று […] - [பவானி வட்டாரத்தில் வணிக முறையிலான நாட்டு இன பறவைகள் வளர்ப்பு பற்றி பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95/): ஈரோடு, ஆக.9 ஈரோடு மாவட்டம், பவானி வட்டாரத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வணிக முறையிலான நாட்டு இன பறவைகள் வளர்ப்பு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி சன்னியாசிப்பட்டி கிராமத்தில் 8.8.24 அன்று நடைப்பெற்றது. ம.கனிமொழி, வேளாண்மை உதவி இயக்குநர் ,பவானி வேளாண்மை – உழவர்நலத்துறை திட்டங்கள் மற்றும் கரும்பு மற்றும் நெற் பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினார். யுவராஜ், கால்நடை மருத்துவர் கோழி இனங்கள், கலப்பின கோழி மற்றும் நாட்டுகோழி வளர்ப்பு முறை, பராமரிப்பு முறை, தீவன முறை மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடு த்துரைக்கப்பட்டது. மேலும் கோழி அடை காக்கும் கருவி (ஐஐஉரடியவழச) மற்றும் தடுப்பூசி முறை குறித்து தெரிவித்தார். முருகேசன், விதை சுத்திகரிப்பு அலுவலர், நெற்பயிரில் சாகுபடி முறைகள் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து […] - [மாடித்தோட்ட காய்கறிகள் சாகுபடி செய்யும் செயல் விளக்க பொருட்கள் அடங்கிய பெட்டி வழங்கல்](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a/): திண்டுக்கல், ஆக.7 திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டம், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான மாடித்தோட்ட காய்கறிகள் சாகுபடி செய்யும் செயல் விளக்க பொருட்கள் அடங்கிய பெட்டி அட்மா திட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டது.வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் அறிவுரையின் படி இந்த மாடித்தோட்ட தொகுப்புப் பெட்டியில் கட்டர் , காய்கறி விதைகள், கரண்டி காயர் பித் கட்டி போன்றவற்றை ஒருங்கிணைந்த விவசாயிகள் கலைஞர் திட்ட பகுதி விவசாயிகளுக்கு கொடுத்து அதன் பயன்களை பற்றி கூறி வீட்டிலேயே தங்கள் அன்றாடம் தேவைப்படும் காய்கறிகளை மாடியிலேயே போட்டு விளைவித்து பயன்பெறலாம் என கூறி பயனாளி யோகேஷ் பன்றிமலைக்கு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் கார்த்தி உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் , உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜா, காந்திகிராம வேளாண் பல்கலைக்கழக கிராம தங்கல் மாணவிகள் புவனேஸ்வரி, பவானி, அபிதா தேவி , அக்ஷிதா மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் […] - [ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5/): இராமநாதபுரம், ஆக.7 இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரம், வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மானாங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகம் குறித்து விவசாயிகள் பயிற்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிவகாமி வேளாண்மை உதவி இயக்குனர், விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை, ராமநாதபுரம் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விதை நேர்த்தி முறைகள், சான்று நிலை விதைகள் பயன்கள், அங்கக சான்று பெறுவதற்கான வழிமுறைகள், பயறு வகை பயிர்களுக்கு இலைவழி டிஏபி கரைசல் தெளித்தல் மற்றும் மூலிகை பூச்சி விரட்டி தயாரித்தல், பஞ்சகாவியம் தயார் செய்தல், மேலும் அங்கக வேளாண்மையில் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்க உரையாற்றினார். பயிற்சியில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப்பயிர்களின் விதைகள் மானியத்தில் வழங்கப்படுவது விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும் நெல் விதைப்பிற்கு […] - [பெருந்துறை வட்டாரத்தில் இயற்கை வேளாண்மை இடுபொருள்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): ஈரோடு, ஆக.7 ஈரோடு வட்டாரம், பெருந்துறை வட்டாரம், வேளாண்மை – உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் கருக்குபாளையம் வருவாய் கிராமத்தில் 7.8.24 அன்று உழவர்களுக்கு இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது. பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.பிரசாத் தலைமையேற்று பேசுகையில் இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் குறித்தும் அவற்றை கட்டுப்படுத்தம் முறை குறித்தும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் பற்றியும் தெளிவாக விளக்கினார். மேலும் இயற்கை விவசாயி கணேசன், பேசுகையில் அங்கக வேளாண்மை செய்வதற்கான வழிமுறைகள் பயிர் சுழற்சி மற்றும் அங்கக இடுபொருள் தயாரிக்கும் முறைகள் (பஞ்சகாவ்யா, அமிர்தகரைசல், ஜீவாமிர்தம், மற்றும் பூச்சி மேலாண்மை, களைமேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கூறினார். இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் அருள்மொழிவர்மன், பேசுகையில் துவரை வரிசை நடவு முறைகள் பற்றியும் தங்கள் துறை சார்ந்த […] - [எஸ்.புதூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/): சிவகங்கை, ஆக.7 சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரம், அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி மானாவாரி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் வேளாண் விரிவாக்க மையம் எஸ்.புதூரில் 29.7.24 அன்று நடத்தபட்டது. இப்பயிற்சிக்கு எஸ்.புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி, பயிற்சியினை தொடங்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். தோட்டக்கலைதுறை உதவி இயக்குநர் சரவணன், தோட்டக்கலைத் துறையின் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்கள் மற்றும் மானிய விலைகள் பற்றியும் அதன் விபரங்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார் . ப.கார்த்திகா, ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் பற்றியும் அதன் மூலம் வழங்கப்படும் இடுபொருட்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார் . பயிற்சிக்குகுன்றக்குடி உதவி பேராசிரியர் விமலேந்திரன் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்டவிவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையத்தின் பயிர்கள் வளர்ச்சி முறை மற்றும் தீவன பயிர்கள் சாகுபடி […] - [கொடுமுடி வட்டாரத்தில் எள் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b3/): ஈரோடு, ஆக.7 ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின், கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம்; கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இச்சிப்பாளையம் வருவாய் கிராமத்தில் விவசாயிகளுக்கு எள் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை தொழில்நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு மு.ரேகா, தலைமை தாங்கி முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர பயிர் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் பசுந்தாள் உர விதைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் வேளாண் இடுபொருள்;களான உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்களின் மானிய விவரங்களையும் எடுத்து கூறினார். பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய வேளாண் ஆராய்ச்சியாளர் சோபதிங்கள் மணியன் மஞ்சள், வாழை , கரும்பு மற்றும் இதர பயிர் சாகுபடி தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ், துவரை வரிசை நடவு முறைகள் பற்றியும் துறை சார்ந்த திட்டங்கள் […] - [இந்திய பொதிவாக்க தொழில்நுட்ப கழகப் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8/): கடலூர், ஆக.7 கடலூர் மாவட்டம், விருத்தாசலம், வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் 5.8.24 மற்றும் 6.8.24 இரண்டு நாட்கள் தொழில்நுட்ப கழக பயிற்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுதுணையோடு, இந்திய பொதிவாக்கத் தொழில் நுட்பகழகம், சென்னை நிதி உதவியோடு, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மேம்படுத்தப்பட்ட உயர்தர பொதிவாக்கத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நடைப்பெற்றது. 60 கும் மேற்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம் மாவட்டஉழவர் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் பேக்கேஜிங் பற்றிய விளக்கமும், காய்கறி, பழங்கள், சமையல் எண்ணெய், பால் பொருட்கள், மசாலா வகைகள், தானியப் பொருட்களை சீராக பேக்கேஜிங் மற்றும் தரக்கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தரக்கட்டுபாடு, பரிசோதனை, விற்பனை முத்திரை மற்றும் பதிவு செய்தல், காப்புரிமை பெறுதல், பேக்கேஜிங் மூலப்பொருள் செய்யும் உற்பத்தியாளர் விவரங்கள் பற்றி இரா.பொன்குமார் (துணை இயக்குநர்), பிரேம் ராஜ் (தொழில்நுட்ப உதவியாளர்), ச.கார்த்திக், வினித் ஆகியோர் விரிவாக […] - [தலைவாசல் வட்டாரத்தில் அங்கக இடுபொருட்கள் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%99/): சேலம், ஆக.7 சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தியாகனூர் கிராம விவசாயிகளுக்கு அங்கக இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி வழங்கப்பட்டது. துணை வேளாண்மை அலுவலர் மணவழகன் பயிற்சிக்கு தலைமை தாங்கினார். இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். வட்டாரத் தொழில்நுட்பம் மேலாளர் சக்தி அனைவரையும் வரவேற்று பேசினார். மண் மாதிரி எடுத்தலின் அவசியம், உயிர் உரங்களை உபயோகிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசினார்.இயற்கை விவசாயி மற்றும் உழவர் உற்பத்தி குழு தலைவர் ராஜேந்திரன் பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், ஐந்திலை கரைசல், இயற்கை பூச்சி விரட்டி மற்றும் மண்வள மேலாண்மை, இயற்கை சாகுபடி தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு தனது அனுபவத்தை எடுத்துக் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் கார்த்தி வேளாண்மைதுறை மூலம் செயல்படுத்தப்படும்திட்டங்கள் பற்றி கூறினார். பட்டு வளர்ச்சி துறை அலுவலர் சத்யமூர்த்தி பட்டு வளர்ப்பு சாகுபடி தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். உதவி […] - [மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99/): சிவகங்கை, ஆக.6சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரம் வேளாண்மைத் துறையின் மூலம் அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்டஅ ளவிலான விவசாயிகள் பயிற்சி மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மானாமதுரையில் பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சிக்கு மானாமதுரை வேளாண்மை உதவி இயக்குநர் ஜா.இரவிசங்கர் பயிற்சியினை தொடங்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். மேலநெட்டூர் கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் கால்நடை வளர்ப்பு மற்றும் ஊட்டச்சத்துமேலாண்மை பற்றிய தொழில்நுட்பகளை எடுத்துக்கூறினார். மானாமதுரை கால்நடை மருத்துவர் டாக்டர் விக்னேஷ் கால்நடைநோய்களுக்கான காரணங்கள் மற்றும் மேலாண்மை பற்றிய தொழில்நுட்பகளை எடுத்துக்கூறினார். மானாமதுரைவேளாண்மைஅலுவலர் த.கிருத்திகா நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். மானாமதுரை துணை வேளாண்மை அலுவலர் நா.சப்பாணிமுத்து மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கான உத்திகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடு களை உதவி […] - [வாலாஜா வட்டாரத்தில் தனிப்பட்ட விவசாயிகளின் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றிட திட்டம்](https://agridoctor.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa/): இராணிப்பேட்டை, ஆக.6 கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி சமன் செய்து உழுவதற்கு மானியம் வழங்கப்படுகிறது என வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, தெரிவித்தார். ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்று முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்ற நோக்கில், முதன்மைத் தொழிலான உழவுத் தொழிலை மேம்படுத்தி, நிகர சாகுபடிப் பரப்பை அதி கரித்திட தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி விவசாயிகளுக்குத் தந்திட ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ எனும் திட்டம் செயல்படு த்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், இதர தரிசு நிலங்கள் மற்றும் பயிரிடுவதற்கு ஏற்ற தரிசு நிலங்களை உடைய தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் உள்ள முட்புதர்கள், மரங்கள் போன்றவற்றை நீக்குவதற்காகவும், நிலத்தினை சமன் செய்து உழுவதற்காகவும் நிதி உதவி அளிக்கப்படுகிறது. தனிப்பட்ட விவசாயிகள் தாங்களாகவோ அல்லது வாடகை இயந்திரங்கள் மூலமாகவோ […] - [தக்காளியைத் தாக்கும் புள்ளிவாடல் நோய்](https://agridoctor.in/%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3/): தக்காளியை பல்வேறு வகையான நோய்கள் தாக்கினாலும் புள்ளிவாடல் நோயானது மகசூலை குறைப்பதோடு மட்டுமல்லாமல் சந்தையிலும் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படு த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை பல்வேறு வகையான காய்கறி பயிர்களையும் தாக்குகின்றது. இந்நோயான துடாஸ்போ வகையைச் சேர்ந்த நச்சுயிரி கிருமியினால் உண்டாகிறது. இந்நச்சுயிரியை இலைப் பேனானது ஓரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்புகின்றது. புள்ளிவாடல் நோயானது இலை,தண்டு மற்றும் காய்களை தாக்குகின்றன. பாதிக்கப்பட்ட இலைகளில் முதலில் பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும். பின்னர் இலைகளின் விளிம்புகளில் வெங்கல நிறத்தில் கருகல் காணப்படும். நாளடைவில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பழுப்பு நிறத்தைஅடைந்துபின்னர் காய்ந்துவிடும். பாதிக்கப்பட்ட செடிகளானது வளர்ச்சியடையா மல் குட்டையாக காணப்படும் . புள்ளிவாடல் நோய் தாக்கப்பட்ட பழத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வளையங்கள் காணப்படும். இதனால் சந்தை வாய்ப்பு குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்நோயைக் கட்டுப்படுத்தநோய் தாக்கிய செடிகளை வேரோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும். இதனால் […] - [வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a4/): கடலூர், ஆக.6 கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் இயற்கைவேளாண்மை நண்பர்களுக்கான 5 நாட்கள் (30.07.2024 முதல் 03.08.2024) வரைபயிற்சி நடைபெற்றது. தொடக்க பயிற்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. நடராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து தொழில்நுட்ப விஞ்ஞானிகள், இயற்கை வேளாண்மை பற்றியும், மண்வளம் பேணி காப்பது குறித்தும், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், மண்வளத்தை மீட்டு எடுத்தல், சுற்றுசூழல் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, மண்ணின் ஆரோக்கியம், மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்தும், மண் சேகரிப்பு முறைகள் பற்றியும், இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் தயாரிப்பது குறித்தும், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை மற்றும் பாரம்பரிய விதைகள் தேர்வு குறித்தும் பயிர் மற்றும் கால்நடை ஒருங்கிணைப்பு, பல்வேறு நன்மை பயக்கும் தாவரகளைக் கொல்லிகளின் முறையான பயன்பாட்டினை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கினர். ஒருங்கிணைந்த பண்ணையில், ஆடு, மாடு, வாத்து பல பயிர் சாகுபடி […] - [கால்நடை வளர்ப்பில் தீவனப்பயிர்களின் முக்கியத்துவம் குறித்த இலவசப் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%aa/): கரூர், ஆக.6 கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில் பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் கால்நடை வளர்ப்பில் தீவனப்பயிர்களின் முக்கியத்துவம் பற்றிய ஒரு நாள் உள்வளாக பயிற்சி 8.8.24 (வியாழக்கிழமை) அன்று இலவசமாக அளிக்கப்படவுள்ளது. விவசாயிகள் / கால்நடை பண்ணையாளர்கள் / கால்நடை தீவனப்பயிர் வளர்ப்பில் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொண்டு தீவனப்பயிர் உற்பத்தி தொடர்பாக தங்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு தெளிவு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பம் உள்ளவர்கள் 04324 294335 மற்றும் 73390 57073 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் கேட்டுக்கொள்கிறார். மேலும், இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் 8.8.24 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு பயிற்சி மைய வளாகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். - [பயறுவகை பயிர்களில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d/): சிவகங்கை, ஆக.5 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் வேளாண்மைத்;துறையின் மூலம் அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி பயறுவகை பயிர்களில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு வேதியரேந்தல் கிராமத்தில் பயிற்சிஅளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு மானாமதுரை வேளாண்மை உதவி இயக்குநர் ஜா.இரவிசங்கர் பயிற்சியினை தொடங்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். சேதுபாஸ்கர வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிபேராசிரியர் முனைவர் கனிமொழி, சமச்சீர் உரமிடல் மற்றும் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து பயன்படுத்தும் உத்திகள் பற்றிய தொழில்நுட்பகளை எடுத்துக்கூறினார். மானாமதுரை துணை வேளாண்மை அலுவலர் நா.சப்பாணிமுத்து, நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறையில் செயல்பத்தப்படும் மானிய தி ட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் க.அமிர்தலட்சுமி உதவி தொழில்நுட்பமேலாளர்கள் திவ்யா, வினோத்குமார் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் சே.அனுசுயாதேவி அனைவருக்கும் நன்றி கூறினார். - [சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae/): அரியலூர், ஆக,5 அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில், ஆங்கியனூர் மற்றும் கொரத்தாக்குடி கிராமங்களில் சிறுதானிய சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி வேளாண்மை துறையின் மூலம் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் திருமலை வாசன் சிறு தானியங்களில் மக்காச்சோளம், கம்பு, சோளம், கேழ்வரகு முதலிய பயிர்களில் சாகுபடி முறைகளான விதை ரக தேர்வு, விதை அளவு, விதை நேர்த்தி, பயிர் இடைவெளி, உர மேலாண்மை தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம், வறட்சி மேலாண்மைகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பண்ணைய சாகுபடி முறையில் விவசாயிகள் மானாவாரி பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு முதலிய பல்வேறு முறைகளை ஒருங்கிணைந்து பின்பற்றுவதன் மூலம் கூடுதல் லாபம் […] - [பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4-2/): சேலம், ஆக.5 சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி வரகூர் கிராம விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வரகூர் கிராம தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சக்தி வரவேற்று பேசினார். துணை வேளாண்மை அலுவலர் மணவழகன் பாரம்பரிய நெல் சாகுபடியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி கூறினார். வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மாநில அரசு திட்டங்கள் பற்றி கூறினார். இயற்கை ஆர்வலர் வெங்கடாசலம் சீரக சம்பா, தூய மல்லி, சிவன் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் முறை குறித்து கூறினார். மேலும் பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். உதவி தோட்டக்கலை அலுவலர் ராமு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் […] - [இயற்கை வேளாண்மை/அங்ககவேளாண் இடுபொருட்கள் தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3/): ஈரோடு, ஆக.5 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை/அங்கக வேளாண் இடுபொருட்கள் தயாரித்தல் பயிற்சி தாசரிபாளையம் கிராமத்தில் 5.8.24 அன்று கு.கற்பகம், வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) தலைமையில் நடைபெற்றது. ப.உமா மகேஸ், வேளாண்மை அலுவலர், மத்திய மற்றும் மாநில திட்டங்கள் மற்றும் உயிர் உரங்கள் உபயோகிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார். சங்கீதா, உதவி பேராசிரியர் JKK கல்லூரி அங்கக வேளாண்மை செய்வதற்கான வழிமுறைகள் பயிர் சுழற்சி மற்றும் அங்கக இடுபொருள் தயாரிக்கும் முறைகள்(பஞ்சகாவ்யா, அமிர்தகரைசல், ஜீவாமிர்தம் மற்றும் பூச்சிவிரட்டி) பூச்சி மேலாண்மை, களை மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கூறினார். சத்தியமங்கலம் வட்டார தொழில்நுட்பமேலாளர் கார்த்திக், உழவன் செயலி பதிவேற்றம் மற்றும் இ வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை சத்தியமங்கலம் உதவி தொழில்நுட்பமேலாளர்கள் த.நந்தினி மற்றும் அ.வீரமணி ஆகியோர் செய்திருந்தனர். - [சர்கார்சாமக்குளம் வட்டாரத்தில் அமைக்கப் பட்டுள்ள விதைப்பண்ணைகளை விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் ஆய்வு](https://agridoctor.in/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be/): கோயம்புத்தூர், ஆக.3 கோவை மாவட்டம் சர்கார்சாமக்குளம் வட்டாரத்தில் நடப்பாண்டு வேளாண்மை துறையினால் விதை உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள சோளம், கம்பு அரசு விதைப்பண்ணைகளை விதைச்சான்றளிப்புமற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் பி.ஆ. மாரிமுத்து ஆய்வு செய்தார். இனத்தூய்மை, புறத்தூய்மை மற்றும் நல்ல முளைப்புத்திறன் கொண்ட சான்று விதை விவசாயிகளை சென்று அடைய அரசு விதைப்பண்ணை அமைத்து விதைச்சான்றளிப்பு அலுவலர்களால் பயிர்களின் முக்கிய பருவங்களில் ஆய்வு செய்யப்பட்டு, விதை சுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டபின் விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விதை ஆதாரம், சான்று நிலைக்குரிய குறைந்தபட்ச விதை தர நிலையில் தேர்ச்சி பெற்ற பின்பு சான்று அட்டைகள் பொருத்தப்படும். தற்போது சர்கார் சாமக்குளம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பு கோ-10 ஆதாரநிலை2 விதைப்பண்ணையை விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் பி.ஆ. மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டு , வயல் தர காரணிகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் கம்பு கோ-10 இரகமானது 85-90 நாளில்அறுவடைக்கு தயாராகும். செடி-160-180 […] - [தரமான நெல்விதை உற்பத்தி பற்றிய களப்பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): திருச்சி, ஆக.3 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி யாகதிருச்சி மாவட்டம், வையம்பட்டி வட்டாரத்தில் உள்ள அரசு நிலைப்பாளையம் கிராமத்தில் நெல்லில் தரமான விதை உற்பத்தி பற்றிய களப்பயிற்சியானது 31.7.24 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் 30 விவசாய பெண்கள் மற்றும் விவசாயிகள் பங்கு பெற்று பயனடைந்தனர். இப்பயிற்சியில் தரமான விதையின் குணாதிசயங்கள், விதைதேர்வு, விதைநேர்த்தி, வயல்தேர்வு, ஒருங்கிணைந்தஉரநிர்வாகம், கலவன்அகற்றுதல், அறுவடை, சுத்திகரிப்புமற்றும்விதைசேமிப்புபற்றிவிளக்கமாக பேராசிரியர் முனைவர் ந.புனிதவதி, (விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை) எடுத்துரைத்தார். மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விதைஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள விதை அமிர்தம் கொண்டு விதைநேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு 15 மில்லி விதை அமிர்தம் சேர்த்து நன்கு கலந்து பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும் என்பதனையும் அறிவுறுத்தி னார். இவ்வாறு விதைகளை விதைநேர்த்தி […] - [அட்மா திட்டத்தில் மண்புழு உரம் குறித்த பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4/): அரியலூர், ஆக.3 அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் விவசாயிகளுக்கான மண்புழு உரம் உற்பத்தி குறித்த பயிற்சி வாழைக்குறிச்சி கிராமத்தில் நடைப்பெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் கலந்து கொண்டு பேசுகையில் மண்புழு உரமானது விவசாயிகளுக்கு மண்ணின் வளத்தை பாதுகாத்து பயன்தரும் வரப்பிரசாதமாக திகழ்கிறது என கூறினார். மேலும் அவர் பேசுகையில் மண்புழுஉரம் இடுவதால் மண்துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி குருணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இதனால் மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீர் பிடிப்புத்திறன் மேம்படுத்தப்படுகிறது. களிமண் பாங்கான மண்ணில் உள்ள குழம்புத் தன்மையைக் குறைக்கிறது. மேலும் மண்அரிப்பு, கோடைக்காலத்தில் மண்ணின் வெப்ப நிலை ஆகியவற்றை குறைத்து வேர்க்காயம் ஏற்படுவதை தடுக்கிறது. வாழை,தென்னை, கரும்பு, பழப்பயிர்கள் குறிப்பாக எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, மா போன்ற பழப்பயிர்கள் கோடையில் முழுமையாக பாதுகாக்க மண்புழு உரம் […] - [தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-5/): கோயம்புத்தூர், ஆக.3 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி 6 மற்றும் 7.8.24 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், (வாயில் எண்.7, மருதமலை சாலை வழி) நடைபெறும். கீழ்கண்டஉணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும். சு தோசைமிக்ஸ்சு அடை மிக்ஸ்சு டேக்ளாமிக்ஸ்சு பிசிபெலா பாத் மிக்ஸ்சு கீர் மிக்ஸ்சு ஐஸ்கீரிம் மிக்ஸ்சு தக்காளிசாதம் மிக்ஸ்சு சூப் மிக்ஸ்சு குளோப் ஜாமூன் மிக்ஸ் ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 ரூ ழுளுகூ 18%) – பயிற்சிமுதல் நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடைபின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003. தொலைபேசி எண் : 94885 18268, […] - [சவுடு மண்ணில் கிர்ணி பழம் சாகுபடி](https://agridoctor.in/%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae/): திருவள்ளூர் விவசாய பட்டதாரி சாதனை சவுடு மண்ணில், கிர்ணி பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை முதுகலை பட்டதாரி முன்னோடி விவசாயி பி.மாதவி கூறியதாவது: எங்களுக்கு சொந்தமான சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி, காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், தோசை பண்டு என அழைக்கப்படும், கிர்ணி பழம் சாகுபடி செய்துள்ளேன். கிர்ணி பழத்திற்கு, சவுடு கலந்த களிமண் மற்றும் செம்மண் நிலங்களில் நன்றாக விளைச்சலை கொடுக்கும். பிற மண்ணில், கிர்ணி பழ கொடி வருவதிலும், மகசூல் ஈட்டுவதிலும் சிரமமாக இருக்கும். நம்மூர் சவுடு மண்ணுக்கு அருமையாக வளர்கிறது. இயற்கை உரங்கள் மற்றும் நீர் பாசனத்தை முறையாக கையாண்டால், கூடுதல் மகசூல் பெற முடியும். விற்பனை நிலவரத்தை பொறுத்து, கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். - [இராமநாதபுரம் வட்டாரத்தில் பெருவயல் கிராமத்தில் சமச்சீர் உரமிடல் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல்](https://agridoctor.in/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): இராமநாதபுரம், ஆக. 2 இராமநாதபுரம் வட்டாரம் பெருவயல் பஞ்சாயத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை – விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ்சமச்சீர் உரமிடல்மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல் விவசாயிகள் பயிற்சிநடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய இராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மா.கோபாலகிருஷ்ணன் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய தி ட்டங்கள், மானிய விபரங்களை உழவன் செயலி மூலம் பதிவு செய்தல் விபரங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படு த்தப்படும் திட்டங்கள் மற்றும் அவற்றின் மானிய விபரங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ச.கண்ணையா முன்னிலை வகித்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பெருவயல் பஞ்சாயத்து விவசாயிகளுக்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர […] - [பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4/): சேலம், ஆக.2 சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி வரகூர் கிராம விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வரகூர் கிராம தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சக்தி வரவேற்று பேசினார். துணை வேளாண்மை அலுவலர் மணவழகன் பாரம்பரிய நெல் சாகுபடியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி கூறினார். வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மாநில அரசு திட்டங்கள் பற்றி கூறினார். இயற்கை ஆர்வலர் வெங்கடாசலம் சீரக சம்பா, தூய மல்லி, சிவன் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் முறை குறித்து கூறினார். மேலும் பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார், உதவி தோட்டக்கலை அலுவலர் ராமு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் […] - [பயறுவகை பயிர்களில் சான்றளிக்கப்பட்ட விதைகளின் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): புதுக்கோட்டை, ஆக.2 புதுக்கோட்டை வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டிற்கு பயறுவகை பயிர்களில் சான்றளிக்கப்பட்ட விதைகளின் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி ஆதனக்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியில் எம்.ஆதிசாமி வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசன திட்டம்) கலந்து கொண்டு நுண்ணீர் பாசன திட்டத்தின் முக்கிய நோக்கம் மற்றும் அதனை பெற விரும்பும் விவசாயிகள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், பயறுவகை பயிர்களில் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பல்வேறு கருத்துக்களை விவசாயிகளிடம் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் குறிப்பாக நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்கள். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சு.அன்பரசன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு மானிய விபரங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மேலும் த.ஸ்வர்ணா வட்டார வேளாண்மை அலுவலர் விதை […] - [தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-4/): கோயம்புத்தூர், ஆக.2 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி இம் மாதத்திற்கான பயிற்சி, 5.8.24 திங்கட்கிழமை அன்று காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சியில் கலந்து கொள்ளவிழைவோர், பயிற்சி நாளன்று, பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) நேரிடையாக செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், தொலைபேசி : 0422-6611336, 6611226,மின்னஞ்சல்: ஸ்ரீழிமிஜுலியிலிஆதீ@மிஐழிற்.ழிஉ.ஷ்ஐ தொடர்பு கொள்áலாம். - [உயிர்ம இடுபொருள் உற்பத்தி பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): சேலம், ஆக.1 வேளாண்மை துறையின் சார்பாக ஆத்மா திட்டத்தில் கடப்பேரி கிராமத்தில் உயிர்ம இடுப்பொருள் உற்பத்தி பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தலைç மயேற்று வேளாண் துறை சார்ந்த திட்டங்களான மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், பயறு வகை பயிர்களை வரப்பு பயிர்களாகவும் ஊடு பயிர்களாகவும் பயிரிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள், சணப்பை, தக்க பூண்டு போன்ற தழைசத்து கொண்ட பயிர்களை பயிரிடுதல் அவற்றை மக்கச் செய்து மண்ணிற்கு தழைச்சத்தை எவ்வாறு அளித்தல், பயறு வகை பயிர்களை பயிர் செய்வது மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் தெளிவாக விளக்கம் அளித்தார்.தொடர்ந்து தேவேந்திரன் அங்கக பண்ணைய விவசாயி, உயிர்ம இடு பொருட்களை எவ்வாறு தயாரிப்பது அவற்றை எவ்வாறு பயன்படு த்துதல் , மண்ணை வளப்படுத்த தானியங்களை பயிரிட்டு உழுதல், தக்க பூண்டு, சணப்பை பயிரிட்டு உழுவதால் ஏற்படும் நன்மைகள், மண்ணை வளப்படுத்த மண்புழு தயாரிக்கும் முறைகள், அமிர்த கரைசல், […] - [விதைகளை பரிசோதனை செய்து தரத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்](https://agridoctor.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): வித்தின்றி விளைச்சல் இல்லை” என்பதற்கேற்ப நம் வேளாண்மையில் நிறைந்த மகசூல் பெறத் தேவையான இடுப்பொருட்களில் விதை மிகவும் முதன்மையானதும் ஆகும். விவசாயப் பெரு மக்களுக்கு தரமான விதைகள் சென்றடைவதையும், தரமற்ற விதைகள் சென்றடைய விடாமல் தடுப்பதையும் தலையாய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது விதைப்பரிசோதனை நிலையம் ஆகும். இவ்விதைப்பரிசோதனை நிலையத்திற்கு விதைச்சான்றுஉதவி இயக்குநரிடமிருந்து சான்றிப்பு விதை மாதிரிகள், விதை ஆய்வுத் துணை இயக்குநரிடமிருந்து ஆய்வாளர் விதைமாதிரிகள் மற்றும் விவசாயிகள், விதை விற்பனையாளர்களிடமிருந்து பணி விதை மாதிரிகள் என மூன்று வகையான விதை மாதிரிகள் பெறப்பட்டுவிதைப் பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விதைப்பரிசோதனை நிலையத்தில் பெறப்படும் விதை மாதிரிகள் முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்தத் தன்மை, இனத்துாய்மை பூச்சித்தாக்குதல் போன்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு முடிவுகள் உரிய கால அவகாசத்தில் றீPசிளீறீ என்ற இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. முளைப்புத்திறன் மக்காச்சோளத்திற்கு 90 சதம், நெல், எள், கொள்ளுக்கு 80 சதம், பயறு வகைகள், […] - [கத்தரியில் சிற்றிலை நோய் தாக்குதல் மற்றும் மேலாண்மை](https://agridoctor.in/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d/): அறிமுகம்சிற்றிலை நோய் என்பது உலகளவில் கத்தரிக்காய் பயிர்களை பாதிக்கும் பொதுவான மற்றும் குறிப்பிடத்தக்க பிரச்சனையாகும். இது தாவரத்தின் புளோயம் திசுக்களை பாதிக்கும் ஒரு வகை பாக்டீரியா போன்ற உயிரினமான பைட்டோபிளாஸ்மாவால் ஏற்படுகிறது. அறிகுறிகள்Ø இந்த நோயினால் தாவரத்தின் இலைகள் சிறியதாகவும், வளர்ச்சி குன்றியதாகவும், சிதைந்ததாகவும், இலையின் அளவு சிறியதாக மாறிவிடும்.Ø இலைகள் சிவப்பு மற்றும் ஊதா நிறத்துடன் சுருண்டு, சுருக்கம் அல்லது சிதைந்து காணப்படும.Ø பாதிக்கப்பட்ட தாவரங்கள் வளர்ச்சி குறைதல், பூக்கள் மற்றும் பழங்கள் உற்பத்தி மற்றும் முன்கூட்டியே உதிர்தல் ஆகியவற்றை வெளிப்படுத்தலாம்.Ø கடுமையான சந்தர்ப்பங்களில், நோய் முழுமையான இலையுதிர் மற்றும் தாவர மரணத்தை ஏற்படுத்தும். காரணங்கள்சு பைட்டோபிளாஸ்மா கத்தரி செடிகளுக்கு புளோம் உண்ணும் பூச்சிகளின் செயல்பாட்டின் மூலம் பரவுகிறது அதாவது தத்துப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஈக்கள் மற்றும் இலைப்பேன்கள் போன்றவையாகும்.சு பூச்சியின் உடலுக்குள் பைட்டோபிளாஸ்மா பாக்டீரியா பெருகி, அதன் சாற்றை பூச்சி உண்ணும் போது தாவரத்திற்கு பரவுகிறது.சு பாதிக்கப்பட்ட நாற்றுகள் […] - [சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்தல்!](https://agridoctor.in/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): தஞ்சாவூர், ஆக.1 சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் வினாயகமூர்த்தி தனியார் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில், சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை அல்லது நீலநிறம்) முறையே சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளையே விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். உண்மை நிலை விதைகளுக்கு விவர அட்டை மட்டும் இருக்கும். விவர அட்டையில் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள், பயிர் செய்ய ஏற்ற பருவம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் கட்டாயம் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். அனைத்து தனியார் விதை விற்பனையாளர்களும், விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் இன்வாய்ஸ் மற்றும் முளைப்பு அறிக்கை கட்டாயம் பராமரிக்கபட […] - [அலங்காநல்லூர் வட்டாரத்தில் சூரியகாந்தியில் களைக்கட்டுப்பாடு மற்றும் ஊடுபயிர் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d-3/): மதுரை, ஆக,1 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தில் அழகாபுரி கிராமத்தில் சூரியகாந்தியில் களைக்கட்டுப்பாடு மற்றும் ஊடுபயிர் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி 31.7.24ம் தேதி அன்று நடைபெற்றது. அதில் 40 விவசாயிகள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் அலங்காநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில் மண்வள மேலாண்மை பயன்பாடுகள் அதன் அவசியங்கள் மற்றும் மத்திய மாநில திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தக்கைப்பூண்டு விதைகள் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது மற்றும் பாரத பிரதம மந்திரி கிசான் நிதி திட்டம், நுண்ணீர்ப் பாசன திட்டம் குறித்து பேசி அனைவரையும் வரவேற்றார். ஓய்வு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் இராமன் பேசுகையில் சூரியகாந்தியில் களைக்கட்டுப்பாடு மற்றும் ஊடுபயிர் நன்மைகள் அதன் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் சூரியகாந்தியில் கிடைக்ககூடிய […] - [விவசாயிகளிடையே நானோ உரங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது](https://agridoctor.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d/): மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் தகவல் புது தில்லி, ஜூலை 30 உரக் கட்டுப்பாடு ஆணை, 1985ன் கீழ் குறிப்பிட்ட நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் நானோ யூரியா மற்றும் நானோ டிஏபி ஆகியவை பற்றி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு ள்ளது. அதைத் தொடர்ந்து, ஆண்டுக்கு 26.62 கோடி பாட்டில்கள் (ஒவ்வொன்றும் 500 மில்லி) திறன் கொண்ட ஆறு நானோ யூரியா ஆலைகள் மற்றும் ஆண்டுக்கு 10.74 கோடி பாட்டில்கள் (ஒவ்வொன்றும் 500 / 1000 மில்லி) திறன் கொண்ட நான்கு நானோ டிஏபி ஆலைகள் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் நானோ யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், உரத் துறை அதன் பொதுத்துறை நிறுவனங்களான தேசிய உரங்கள் லிமிடெட், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட் ஆகியவற்றை நானோ யூரியா ஆலைகளை அமைக்க ஊக்குவித்துள்ளது. விவசாயிகளிடையே நானோ உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சு விழிப்புணர்வு […] - [சிறுதானிய பயிர்களில் மதிப்புக்கூட்டுதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf/): கன்னியாகுமரி, ஜூலை 30 தமிழ்நாடுஅரசு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தினையும் பொருளாதாரத்தையும் முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்த பகுதிகளில் விளையும் பொருள்களை தரம் உயர்த்தி விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க செய்திடும் வகையில் சிறுதானிய பயிர்களில் மதிப்புக்கூட்டல் என்ற தலைப்பில் மேல்புறம் வட்டாரம் மருதங்கோடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி 29.7.24 அன்று நடத்தப்பட்டது. மருதங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் சு.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேல்புறம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுய. சந்திரபோஸ் சிறப்புரையாற்றி சிறுதானிய பயிர்களின் நன்மைகள் குறித்தும், அதன் மருத்துவ பயன்கள் பற்றியும், ஒவ்வொரு சிறுதானிய பயிர்களையும் எவ்வாறு மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம் என்பது பற்றியும் விளக்கி கூறினார். வு. ராஜ்பிரவீன், இணை பேராசிரியர் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் கலந்து கொண்டு சிறுதானிய பயிர்கள் குறித்தும் மதிப்புகூட்டுதல் பற்றியும் எடுத்துக்கூறினார். துணை வேளாண்மை அலுவலர் நாகராஜன் வேளாண் சார்ந்த […] - [ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப்பயன்பாடு குறித்த பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): இராமநாதபுரம், ஜுலை 30 இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கபட்ட கும்பரம் கிராமத்தில் முதலைமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப்பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர் செல்வம் கூறுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் பயிர் சாகுபடி செய்வதற்கு முன் மண் பரிசோதனையின் அடிப் படையில் உரமிட்டால் இரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம் என்றார். உச்சிப்புளி வேளாண்மை அலுவலர் கலைவாணி மண் மாதிரி சேகரித்தல் மண்வள அட்டையை பயன்படுத்தி உரம் இடுதல்,திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்களின் பயன்கள் மற்றும் உபயோகம் குறித்து விளக்கி பேசினார். வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் […] - [சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாநில அளவிலான மாபெரும் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி](https://agridoctor.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af/): திருச்சி, ஜுலை 30 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், செயல்முறை விளக்கப் பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவை வழங்கப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு வேளாண்ç மப் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்ககம், பயிர் மேலாண்மை இயக்ககம், பயிர் வினையியல்துறை மற்றும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்தும் விவசாயிகளுக்கான மாநில அளவிலான மாபெரும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் அதன் நிவர்த்தி முறைகள் என்ற தலைப்பில் 7.8.24 (புதன்கிழமை) அன்று காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. பொதுவாக பயிர் சாகுபடியில் மகசூல் இழப்புக்கு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் பயிர் வினையியல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளே காரணம் ஆகும்.இதனை கருத்தில் கொண்டு இந்த […] - [அலங்காநல்லூர் வட்டாரத்தில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d-2/): மதுரை, ஜுலை 30 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான மண்புழு உரம் தயாரிப்பு முறைகள் குறித்த பயிற்சி அ.கோவில்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் சுமார் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில் மத்திய மாநில அரசு திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், மண்புழு உரம் பயன்பாடுகள் நன்மைகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி அனைவரையும் வரவேற்றனர். அலங்காநல்லூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் மு.பாலாமணி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் மற்றும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தக்கைப்பூண்டு விதைகள் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது குறித்த […] - [அறிவியல் முறையில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be/): திருவண்ணாமலை, ஜுலை 26 திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 30ம் தேதி இலவச ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. அறிவியல் முறையில் வெள்ளாடு வளர்ப்பு வரும் 30ம் தேதி, எண்.145, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், புறவழிச் சாலை,வடஆண்டாப்பட்டு, திருவண்ணாமலையில் நடைபெற உள்áது. மேலும் விபரங்களுக்கு 04175 – 298258, 95514 19375 என்ற எண்ணில் தொடர்பு கொள்áலாம். பயிற்சிக்கு வரும் போது ஆதார் எண் கொண்டு வரவும். இத்தகவலை உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், புறவழிச் சாலை,வடஆண்டாப்பட்டு, திருவண்ணாமலை தெரிவித்தார். - [புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் தொடங்க கிராமப்புற இளைஞர்களுக்கு தீவன உற்பத்தி பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): புதுக்கோட்டை, ஜுலை 26 புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்பும் கிராமப்புற இளைஞர்களுக்கு தீவன உற்பத்தி மற்றும் மேலாண்மை குறித்து ஒரு வார பயிற்சி நடைபெறுவதாக திட்ட இயக்கு நர் (அட்மா) மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் (பொ), வி.எம். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், றீவீயூக்ஷு திட்டத்தின் கீழ் மத்திய வேளாண் அமைச்சகத்தின் நிதி உதவியுடன் ஹைதராபாத் மேனேஜ் மற்றும் குடுமியான்மலை, சமிதி நிறுவன வழிகாட்டு நெறிமுறைகளின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்Ø தாடங்க விரும்பும் கிராமப்புற இளைஞர்களுக்கான தீவன உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை குறித்த ஒரு வார பயிற்சி வரும் ஆகஸ்ட் – 2024 மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் கிராமப்புற இளைஞர்கள் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களாகவும் குறைந்தது ஐந்தாம் வகுப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிஒருவாரத்திற்குஆகஸ்ட் -2024 […] - [அலங்காநல்லூர் வட்டாரத்தில் அங்கக வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): மதுரை, ஜுலை 26 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தில் மாணிக்கம்பட்டி கிராமத்தில் அங்கக வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி 25.7.24ம் தேதி அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் அலங்காநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில், மத்திய மாநில திட்டங்கள்,கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி தி ட்டம் பற்றியும் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தக்கைப்பூண்டு விதைகள் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது மற்றும் பாரத பிரதம மந்திரி கிசான் நிதி திட்டம், நுண்ணீர்ப் பாசன திட்டம், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல் திட்டம் குறித்து பேசி அனைவரையும் வரவேற்றார். அலங்காநல்லூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் பாலாமணி, இயற்கை வேளாண்மை முறைகள் பற்றியும் அதற்கு வழங்கப்படும் மானியத் தி ட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். ஓய்வு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் இராமன், பேசுகையில் […] - [அங்கக வேளாண்மை சாகுபடிக்கானச் சான்று பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/): அரியலூர், ஜுலை 26 அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாரம் குழுமூர் வருவாய் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் அட்மாதிட்டம் மூலம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி விவசாயிகள் அங்கக வேளாண்மை சாகுபடிக்கானச்சான்று பெறும் வழிமுறைகள் எனும் தலைப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா அறிவுரையின் பேரில் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் முதலாவதாக அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார். பின்னர் பேசிய வட்டார துணை வேளாண்மை அலுவலர் பாலுசாமி அங்கக வேளாண்முறையில் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களான பஞ்சகாவ்யாஇ மீன்அமினோஅமிலம், ஜுவாமிர்த கரைசல் பற்றியும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை பயன்படுத்தும் முறை அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார். அங்கக வேளாண் முறையில் சாகுபடி செய்து எவ்வாறு அங்கக வேளாண் சான்று பெறுவது என்பது பற்றி விரிவாக எடுத்து கூறினார் மற்றும் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலின் அறிகுறிகள் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது […] - [தலைவாசல் வட்டாரத்தில் பயறு வகை பயிர்களில் விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாடு பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af/): சேலம், ஜூலை 26 சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் புனல்வாசல் கிராமத்தில் அட்மா திட்டத்தில் வேளாண்மை துறை சார்பாக பயிர் வகை பயிர்களில் விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாடு குறித்து பயிற்சி அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வட்டார தொழில்நுட்பம் மேலாளர் சக்தி அனைவரையும் வரவேற்று இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கூறினார். இப்பயிற்சியில் தலைவாசல் வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா பேசுகையில் தமிழ்நாடு அரசின் பசுமை போர்வை திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்கும் திட்டம், நுண்ணீர் பாசனம் சான்று விதைகளின் அவசியம் குறித்து பேசினார். விதை சான்று மற்றும் உயிர்மச்சான்று வேளாண்மை உதவி இயக்குனர் நவநீதகிருஷ்ணன் பேசுகையில் பயிர் வகை பயிர்களில் விதை நேர்த்தி செய்யும் முறைகள் மற்றும் விதை உற்பத்தி வழிமுறைகளை எடுத்துரைத்தார். சான்று விதை உற்பத்தியின் மூலம் கூடுதல் வருமானம் உழவர்களுக்கு கிடைக்கும் என கூறினார். விதை சான்று அலுவல சுரேந்திரன் […] - [பயறு வகைப்பயிர்கள், எண்ணெய் வித்துக்களில் நீர் பற்றாக்குறை குறித்த மேலாண்மை பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3/): அரியலூர், ஜூலை 19 அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் அட்மா திட்டத்தில் கோடை கால பயறு வகைப்பயிர்கள், எண்ணெய் வித்துக்களில் நீர் பற்றாக்குறை குறித்த மேலாண்மை பயிற்சி விவசாயிகளுக்கு, கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் சிலால் கிராமத்தில் நடைப்பெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) செல்வகுமார் தலைமையேற்று பேசுகையில், வேளாண் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டங்கள், மெட்டாரைஸியம் பயன்பாடு, சூடோமோனாஸ், டி.விரிடி பயன்பாடுகள், நுண்ணூட்டங்களின் பயன்பாடு, உயிர் உரங்களின் பயன்பாடு, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகியன குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். இரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து விவசாயம் செய்யுமாறு கூறினார். கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன், கலந்துக்கொண்டு விவசாயிகளிடத்தில் சிறப்புரை ஆற்றி பேசுகையில், நீர் வறட்சியை தவிர்க்க பயிர்களுக்கு 2 […] - [மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் இயந்திரங்களின் பயன்பாடு](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81-2/): மதுரை, ஜூலை 19 மதுரை மாவட்டம், சேடபட்டி வட்டாரத்தில், பேரையம்பட்டி பஞ்சாயித்துக்கு உட்பட்ட நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் இயந்திரங்களின் பங்கு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைப்பெற்றது. இய்பயிற்சியில் ஆடிப்பட்டத்தில் மானாவாரி விவசாயம் தொடங்கவுள்ளது. தற்போது பெய்யும் மழையைக் கொண்டு கோடை உழவு செய்திட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இயற்கை வேளாண் பயிற்றுநர் பொ.வேலுசாமி பேசுகையில், ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யப்பட உள்ள நிலக்கடலை சாகுபடி இயற்கை விவசாயத்தின் மூலம் சாகுபடி செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதாவது பஞ்சகாவ்யம், மீன் கரைசல், இஞ்சி பூண்டு கரைசல், மோர் கரைசல் மற்றும் திரவ அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகிய இயற்கை உரங்களை பயன்படுத்தி பூச்சி, நோய் தாக்குதலின்றி இயற்கை முறையில் அதிக மகசூல் பெற்றிடலாம். விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்திடஅதிக இலாபம் பெறலாம் எனவும் விரிவாக எடுத்துக்கூறினார். இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் இரா.இராமசாமி, பேசுகையில் மத்திய, மாநில திட்டங்கள் பற்றியும், […] - [மண் வள மேம்பாட்டிற்கு மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3/): சிவகங்கை, ஜூலை 19 சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாரம், வேளாண்மைத்துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் 2024-2025-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லக்குளம் கிராமத்தில் 18.7.24 அன்று உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி மண் புழு உரம் தயாரிப்பு என்ந தலைப்பின் கீழ் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன், விவசாயிகளுக்கு மண்ணில் கண்ணுக்கு புலப்படக்கூடிய பல வகையான மட்குண்ணிகள் இருந்தாலும் கழிவுப்பொருட்களை மக்க வைப்பதில் மண்புழுக்களே பெரும்பங்கு வகிக்கின்றன. இதனால் மண்ணில் வளத்தை மேம்படுத்துவதுடன் பயிர் விளைச்சலையும் அதிகரித்து நிலைத்த வேளாண்மைக்கு பெரும் பங்கு வகிக்கும். புழுக்களுக்கு இயற்கையிலும் மண்ணிலும் சாகுபடி முறையிலும் அவற்றை பாதிக்கும் காரணிகளும் பல எதிரிகளும் உள்ளன என்று மண் புழு வளர்ப்பு பற்றி எடுத்துக்கூறினார் இளையான்குடி வேளாண்மை அலுவலர் அழகர்ராஜா, வேளாண்மைத்துறையின் மூலமாக செயல்படுத்தி வரும் மத்திய மற்றும் […] - [மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a/): சிவகங்கை, ஜூலை 19 சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை கீழ் இயங்கி வரும் (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி புலியடிதம்மம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் புலியடிதம்மம் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டனார். இப்பயிற்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் (நேர்முக உதவியாளர்) சுந்தரமகாலிங்கம், வேளாண்மை துணை இயக்குநர் தலைமை ஏற்று உரையாற்றுகையில் பாரத பிரதமர் மந்திரி கௌரவ நிதி திட்டம் பற்றியும், விவசாய கடன் அட்டை திட்டத்தை பற்றியும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள், அரசு மானிய விபரங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், கோடை உழவு பயிர் சாகுபடி போன்ற திட்டங்களின் பயன்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பை அதிகப்படுத்துதல் மற்றும் […] - [பயறுவகைப்ப யிர்களில் மகசூல் அதிகரிக்க டி.ஏ.பி கரைசல் பயன்படுத்த வேளாண்மைத்துறை அறிவுரை](https://agridoctor.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%9a/): நாமக்கல், ஜூலை 19 நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள பயறுவகை பயிர்களில் மகசூலை பெருக்க விவசாயிகள் தவறாமல் டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கவிதா தெரிவித்துள்ளார். நடப்பு பருவத்தில், பயறு வகைகள் பயிர்கள் சில இடங்களில் வளர்ச்சி நிலையிலும், சில இடங்களில் பூக்கும் தருவாயிலும் உள்ளது. பயறு வகைபயிர்களுக்கு பரிந்துரைக்கப்படும் தொழில் நுட்பங்களான விதை நேர்த்தி, உயிர் உர பயன்பாடு, மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரமிடுதல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மற்றும் பயிர் பாதுகாப்பு போன்றவற்றை கடைபிடிக்காத நிலையில் குறைந்த மகசூல் கிடைப்பதால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் போய்விடுகிறது. குறிப்பாக பயறு வகை பயிர்களில் பூக்கும் பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய தொழில் நுட்பமான டி.ஏ.பி., கரைசல் தெளிப்பதை கடைபிடித்தாலே அதிக மகசூல் பெற முடியும். பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி., கரைசல் தெளிப்பதால் இலை வழியாக தழை மற்றும் மணி சத்துகள் […] - [மானாவாரி நில மேம்பாட்டு பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): விருதுநகர், ஜூலை 19 விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 2024-25 ஆம் நிதியாண்டின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண் விரிவாக்க மையத்தில் 18/7/2024 அன்று மானாவாரி நில மேம்பாடு ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள் பயிற்சி அச்சம் தவில் தான் வருவாய் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சி ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் கு தனலட்சுமி, தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் விவசாயிகளின் வரவேற்று நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் வேளாண்மை பயிர் சாகுபடியுடன் இணைந்து ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, அதற்கான தீவனப் பயிர் சாகுபடி, மண்புழு உரம் தயாரிப்பு, பழக்கன்றுகள் சாகுபடி, தேனி வளர்ப்பு போன்றவை கூடுதல் வருவாயை பெருக்க வழி வகுக்கிறது. வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல், பயறு, சிறுதானியம், தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை தடுக்க நுண்ணூட்ட […] - [நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்றிட துத்தநாக சல்பேட் இடுவீர்](https://agridoctor.in/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%95/): மதுரை, ஜூலை 19 மதுரை மாவட்டத்தில் நெற்பயிர் சுமார் 43,550 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் சுமார் 2,200 எக்டர் பரப்பில் நெல் சாகுபடி பரப்பு ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு அடிப்படையாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் தழை, சாம்பல், மணி, இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு ஆகும். துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்பட காரணங்கள்ஒரே நிலத்தில் தொடர்ந்து நெல்பயிர் சாகுபடி செய்வதால், நிலத்தில் எப்போதும் நீர் தேங்கி கரையா உப்புகள் அதிகளவு அதிகரித்து துத்தநாக சத்து குறைபாடு ஏற்படுகிறது. மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகம் இருந்தால், துத்தநாக சத்து பயிருக்கு கிடைக்க இயலாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பயிருக்கு தேவையான அளவுக்கு அதிகமாக மணிச்சத்து, மக்னீசியம் சத்து மற்றும் இரும்புச்சத்து இடுவதால் அவை துத்தநாக சத்தின் செயல்திறனைக் குறைக்கிறது. பற்றாக்குறைக்கான அறிகுறிகள்துத்தநாக சத்து பற்றாக்குறை இருந்தால், பயிர் வளர்ச்சி குன்றி, இளம் […] - [எஸ்.புதூர் வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): சிவகங்கை, ஜூலை 18 சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரத்தில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி மின்னமலைபட்டி வருவாய் கிராமத்தில் 18.7.24 அன்று நடத்தபட்டது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி தலைமை வகித்தார். வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையம், செட்டிநாடு இணை பேராசிரியர், டாக்டர் ஜெயராமசந்திரன் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி தொழில்பட்பங்கள் பற்றியும் அதன் மகசூல் விபரம் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். கதிரி லெபாக்ஷி இரகம் மற்றும் நாட்டு இரகங்களின் குணாதிசய முறைகள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். துணை வேளாண்மை அலுவலர் பாலமுருகன், பயிற்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள தொழில் நுட்பங்களை விரிவாக எடுத்து கூறினார். விதை நேர்த்தி செய்து […] - [பீஜாமிர்தம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாட்டு முறை](https://agridoctor.in/%e0%ae%aa%e0%af%80%e0%ae%9c%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1/): விருதுநகர், ஜூலை 18 இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு ஐதராபாத்தில் மேனேஜ் (ஆயயெபந) நிறுவனத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் க.முருகேசன் இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பீஜாமிர்தம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாட்டு முறை குறித்து விவரிக்கிறார். இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் வளர்ச்சி ஊக்கியில் முதன்மையானது பீஜாமிர்தம் கரைசலாகும். இக்கரைசலை கொண்டு விதை நேர்த்தி செய்து பின்பு விதைகளை விதைக்கலாம். இதன் மூலம் விதை மற்றும் மண்ணின் மூலம் பரவும் பூஞ்சன நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை5 கிலோ நாட்டு பசுஞ்சாணத்தை ஒரு துணியில் மூட்டை போல் கட்டி 20 லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் மூழ்கும்படி 12 மணி நேரம் தொங்கவிட வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் சுண்ணாம்பு பவுடரை கரைத்து தனியாக ஒரு இரவு வைத்திருக்க வேண்டும். நீரில் […] - [ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d/): மதுரை, ஜூலை 18 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் 18.7.24 அன்று வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அமுதன் தலைமையில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில், மத்திய மாநில திட்டங்கள் பற்றியும் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.712/-ஆகும். காப்பீடு செய்ய 31.7.24 கடைசி நாளாக உள்ளதால், அனைத்து விவசாயிகளையும் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு விடுத்து அனைவரையும் வரவேற்றார். மேலும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருட்கள் விவரங்கள் மற்றும் மானிய திட்டங்கள், அரசின் திட்டங்களை எடுத்துரைத்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு சக்திகணேசன், வேளாண்மை அலுவலர், […] - [கொடுமுடி வட்டாரத்தில் தாவர வளர்ச்சி யூக்கிகள் மூலம் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be/): ஈரோடு, ஜூலை 18 ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரம், தேவம்பாளையம் கிராமத்தில் தாவர வளர்ச்சி யூக்கிகள் மூலம் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொ.யசோதா, தலைமையேற்று துவங்கி வைத்தார். இப்பயிற்சியில் பேராசிரியர் சீனிவாசன், பயிர் பாதுகாப்புத்துறை, கே.வி.கே.மைராடா, கோபி, தாவர வளர்ச்சி யூக்கிகள் மூலம் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விரிவாகவும், செயல்விளக்கம் மூலம் தெளிவாக விளக்கி கூறினார். உழவர் உற்பத்தியாளர் குழு முதன்மை செயல் அலுவலர், மதிப்பு கூட்டல் முறைகளையும் அதன் பயன்களையும் தெளிவாக விளக்கினார். சுகன்யா, வேளாண்மை அலுவலர், வேளாண் உற்பத்தி மற்றும் வணிகம், தனது துறை சார்ந்த திட்டங்களை விரிவாக கூறினார். நாகராஜன், உதவி வேளாண்மை அலுவலர், வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களையும் திரவ உயிர் உரங்கள் பயன்பாடுகளை எடுத்து கூறினார். மேலும் உதவி வேளாண்மை அலுவலர்கள் வெங்கடேஷ் மற்றும் […] - [வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்த்தல் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2/): ஈரோடு, ஜூலை 18 ஈரோடு வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகளுக்கு ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது. இது குறித்து ஈரோடு மற்றும் சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.மா.சாமுவேல் தெரிவித்துள்ளதாவது. ஈரோடு வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் கூரபாளையம் வருவாய் கிராமத்தில் உழவர்களுக்கு ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்த்தல் பயிற்சி ஈரோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், சென்னிமலை சாமுவேல் தலைமையில் நடைப்பெற்றது. இந்த விவசாயிகள் பயிற்சியில் வேளாண்மை அலுவலர், சித்தோடு மு.த.ராம்ஜிவன்யா, வேளாண் இடுபொருட்களின் மானிய விபரங்கள், பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார். இந்த விவசாயிகள் பயிற்சியில் தமிழ்நாடு கால்நடைத்துறை ஆராய்ச்சி […] - [PSG அங்கக சான்றளிப்பு பற்றிய நடைமுறைகள்- பயிற்சி](https://agridoctor.in/psg-%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/): விருதுநகர், ஜூலை 16 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 2024-25ஆம் நிதியாண்டு விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் பயிற்சி PSG அங்கக சான்றளிப்பு பற்றிய நடைமுறைகள் என்ற தலைப்பில் உழவர் மையம் அருப்புக்கோட்டையில் வேளாண்மை இணை இயக்குநர் விஜயா தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் அருப்புக்கோட்டை வட்டார விவசாயிகள் 40 நபர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் நாச்சியார். மாவட்டஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கலந்து கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர். வேளாண்மை உதவி இயக்குநர் பத்மாவதி. இயற்கை விவசாயம் மற்றும் உயிர் உரங்கள் உபயோகம் குறித்து எடுத்துரைத்தார். துர்காதேவி. வேளாண்மை அலுவலர், மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி தொழில்நுட்ப உரையாற்றினார். இதில் கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர் வேனுதேவன் PSG அங்கக சான்றளிப்பு பற்றிவிரிவாக எடுத்துரைத்தார். மண்பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர் முருகேசன் […] - [அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf/): திருச்சி, ஜூலை 16 திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டாரம் வேளாண்மைத் துறையின் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் பிச்சாண்டார்கோயில் அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் அபிராமி வரவேற்புரை ஆற்றினார். மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பரமசிவம் தலைமை வகித்து திட்ட விளக்க உரை ஆற்றினார்.மேலும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விதை இருப்பு மற்றும் விதைப்பு முறைகளை பற்றி எடுத்துக் கூறினார். முன்னோடி விவசாயி லோகநாதன் பஞ்சகாவியா, மீன் அமில கரைசல், தேமோர் கரைசல், பூச்சி விரட்டி, பழக் கரைசல் தயாரிப்பு குறித்தும் அதை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் உரை ஆற்றினார். குறுவை சாகுபடி முறைகள் குறித்து துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி எடுத்துக் கூறினார். மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் நடப்பு பருவத்திற்கு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள […] - [அட்மா திட்டத்தில் கலப்பின மீன்கள் வளர்ப்பு விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/): திருச்சி, ஜூலை 16 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், பண்பு அறம் சுற்றி கிராமத்தில் கலப்பின மீன்கள் வளர்ப்பு விவசாயிகள் பயிற்சியில் ஆரோக்கியசாமி மீன் பண்ணை விவசாயி பேசுகையில் மீன்களின் வகைகள் மீன் குட்டை அமைத்தல் மீன்களுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மை பற்றி விரிவாக விளக்கி கூறினார். அதன் பின்பு சபாஸ்டின் செல்வி பேசுகையில் மீன் வளர்ப்பு முறையில் எவ்வாறு லாபகரமாக பயன்படுத்துதல் பற்றி விரிவாக விளக்கி கூறினார். மேலும் தங்கள் மீன் பண்ணையில் செயல்படுத்தப்படும் வழிமுறைகள் பராமரிப்பு முறைகள், மீன் அமிலம் தயார் செய்தல் பற்றி விரிவாக கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். வேளாண்மை உதவி அலுவலர் ராமசுந்தரம் பேசுகையில் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து மானிய திட்டங்களை பற்றி விரிவாக விளக்கி கூறினார். மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் தக்கை பூண்டு 50% மானிய விலையில் பெற்றுக் கொள்ள விவசாயிகளுக்கு விரிவாக அழைப்பு விடுத்தார். மேலும் […] - [ஜி.நடுப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): திண்டுக்கல், ஜூலை 16 திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டாரம், அட்மா திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி ஜி.நடுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.இப்பயிற்சிக்கு மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் கார்த்தி முன்னிலையில் வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரமோகன் ஆலோசனைப்படி எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் செல்வ முகிலன் சிறுதானிய முக்கியத்துவம், சிறிதானிய சாகுபடி அதன் பராமரிப்பு முறை மற்றும் இயற்கை சாகுபடி முறை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இப்பபிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் சரவணன் வேளாண்மை துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி விவசாயிகளை ஒருங்கிணைத்து பெரிதும் உதவினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு மற்றும் அருண்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். - [விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d/): மதுரை, ஜூலை 15 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் அமைச்சகமும் மேனேஜ் நிறுவனமும் இணைந்து சமிதி மூலமாக உழவர்களின் நலன் காக்க இளைஞர் உழவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் இருந்தும் 28 இளைஞர் உழவர்களை தேர்ந்தெடுத்து 6 நாட்கள் பயிற்சியாக கடந்த 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி முடிய வேளாண் அறிவியல் நிலையத்தில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பின் கீழ் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தின் சார்பாக வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ப.சுப்புராஜ் தலைமையில் வேளாண்மை துணை இயக்குநர் கு.சிவஅமுதன் பயிற்சினை துவக்கி வைக்கப்பட்டு மதுரை […] - [பவானி வட்டாரத்தில் பயிறுவகை பயிர்களின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/): ஈரோடு, ஜூலை 15 ஈரோடு மாவட்டம், பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பயிறுவகை பயிர்களின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொடர்பான பயிற்சி மைலம்பாடி கிராமத்தில் 11.7.24 அன்று நடைபெற்றது. ம.கனிமொழி, வேளாண்மை உதவி இயக்குநர், பவானி வேளாண்மை திட்டங்கள் மற்றும் துவரை நடவுமுறை பயிரிட்டு அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினார். செல்வகுமார், உதவி பேராசிரியர், குமரகுரு வேளாண்மை கல்லூரி, ஆப்பக்கூடல், துவரை பயிரில் விதை நேர்த்தி முறைகள் மற்றும் நாற்றங்கால் அமைப்பது, ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கூறினார். தமிழரசு, அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர், துவரை பயிரில் விதை தேர்வு முறை, விதைப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், மதிப்புக்கூட்டுதல் குறித்து ஆலோசனை கூறினார். சித்தையன், உதவி வேளாண்மை அலுவலர் வேளாண்மை திட்டங்கள் குறித்து […] - [சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95/): மதுரை, ஜூலை 15 மதுரை மாவட்டம், செல்லம்பட்டி வட்டாரத்தில் வேளாண்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கண்ணனூர் கிராமத்தில் 15.7.24 அன்று வேளாண்மை இணை இயக்குனர் சுப்புராஜ் மற்றும் துணை வேளாண்மை இயக்குனர் (மத்திய திட்டம்) அமுதன் அறிவுரையின்படி ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை ம‌ற்று‌ம் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் சுந்தரபாண்டியன் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் திலகவதி கலந்து கொண்டனர். வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருள் விவரங்கள் மற்றும் மானிய திட்டங்கள், அரசின் திட்டங்களை எடுத்துரைத்தனர். மற்றும் மண் பரிசோதனை ஆய்வகத்தின் வேளாண்மை அலுவலர் ஜோஸ்பின் நிர்மலா மற்றும் உரக்கட்டுப்பட்டு ஆய்வகத்தின் வேளாண் அலுவலர் இந்துப்ரியா ஆகியோர் கலந்து கொண்டு மண்வளம் மேம்பாடு, […] - [தளி வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகள் ஆய்வு](https://agridoctor.in/%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d/): கிருஷ்ணகிரி, ஜூலை 15 கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் கலா ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மை துறையின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் தளி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பயறு, தேசிய உணவு எண்ணெய் இயக்கம், மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் போன்ற திட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் துவரை நாற்று நடவு செயல் விளக்கம் மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த துவரை நாற்றுக்களை தளி கிராமத்தில் ஆய்வு செய்தார். மேலும் மாருப்பள்ளி மற்றும் ஜவளகிரி கிராமத்தில் துவரை நாற்று நடவு பணியினை துவக்கி வைத்து சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் துவரை […] - [தென்னை நார்கழிவிலிருந்து உரம் தயாரிக்கும் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): இராமநாதபுரம், ஜூலை 15 இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் தென்னை நார்கழிவு உரமாக்குதல் பயிற்சி நடைபெற்றது.இப்பயிற்சியில் தென்னை நார்கழிவில் உரம் தயாரிப்பு குறித்து, உச்சிப்புளி வட்டார அரியமான் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லெட்சுமி காயர் உரிமையாளர் சக்தி கணேஷ் கூறியதாவது, தென்னை நார்க்கழிவு மட்கு உரம் தயாரித்தல் தொடர்பாக மூலப்பொருட்களை சேகரித்தல், உரக்குவியல் அமைத்தல், ஈரப்பதத்தை தக்கவைத்தல், மக்கிய உரம் சேகரிக்கும் முறை,மட்கிய தென்னை நார்க்கழிவின் பயன்கள் குறித்து விளக்கம் கூறினார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ் கூறியாதவது. வேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF) மற்றும் பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களைமுறைப்படுத்தும் திட்டத்தின் (PMFME) திட்ட பயன்கள்,.தகுதிகள், தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி விவசாயிகளிடம் மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் மற்றும்கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் […] - [புதுக்கோட்டை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவங்களின் முன்னேற்ற முனைப்பு முகாம்](https://agridoctor.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0/): புதுக்கோட்டை, ஜூலை 13 புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் நபார்டு வங்கி மூலம் அமைக்கப்பட்ட 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய முனைப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் துணை இயக்குநர் ரா.ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நபார்டு வங்கி மேலாளார் தீபக்குமார் செய்திருந்தார். வேளாண்மை அலுவலர் சுபாஷினி முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் துணை இயக்குநர் தனது உரையில் துறையின் திட்டங்களை விரிவாக எடுத்தக்கூறினார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களது விளைபொருட்களை மதிப்பு கூட்டி அதிக இலாபத்திற்கு விற்பனை செய்திட அறிவுரை வழங்கினார். மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பினை உருவாக்கி செயல்படவும் தங்கள் […] - [மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரமாக்கல் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa/): விருதுநகர், ஜூலை 13 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 2024-25 ஆம் நிதியாண்டு விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் பயிற்சி மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரமாக்கல் என்ற தலைப்பில் புலியூரான் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையம் பண்ணை மேலாளர் ஜீவா, மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தொழில் நுட்பவுரையாற்றினார். வேளாண்மை உதவி இயக்குநர் பத்மாவதி, நிலக்கடலை சாகுபடி பயிர் பாதுகாப்பு மற்றும் சிவப்பு கம்பளிபுழு கட்டுப்பாடு குறித்து எடுத்துரைத்தார். செண்டு, வேளாண்மை அலுவலர் உயிர் உரங்கள் பயன்பாடு மற்றும் நுண்ணூட்ட கலவை பயன்பாடுகள் குறித்து தொழில்நுட்பவுரையாற்றினார். உதவி வேளாண்மை அலுவலர் பெரியகருப்பன், வேளாண்துறை தொகுப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெருமாள்சாமி, நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்யும் தொழில்நுட்பங்களை செயல்விளக்கமாக செய்து காண்பித்தார். மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் […] - [மணப்பாறை அருகே மலையடிப்பட்டி கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் ஒரு நாள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டாரம் வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை கீழ் 2024-25 ஆம் ஆண்டு மலையடிப்பட்டி கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது. இதில் மணப்பாறை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் கண்ணன் பேசுகையில், மண் புழு உரம் தயாரித்தல் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி தெளிவாக விவசாயிகளுக்கு விளக்கிக் கூறி மண் புழு வகைகள், தொட்டி அளவு, ஒரளவு மக்கிய கழிவை கொட்டும் முறைகள், கழிவுகள் நிரம்பிய தொட்டி அதில் புழு விடுதல் முறைகள், தொட்டியில் இடைவெளி விட்டு கல் அடுக்கும் முறைகள், கல் இடுக்குகளில் உரம் வெளி வரும் முறைகள் மற்றும் மண் புழு உரம் சேகரித்து அதனை சந்தைப்படுத்தும் முறைகள் பற்றியும் கூறினார். மண் புழுவின் தன்மை பயிர்களுக்கு மண் புழு உரம் பயன்படுத்தும் அளவு போன்றவற்றை […] - [இயற்கை வேளாண்மை - விதை நேர்த்தி இடுபொருள் பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை](https://agridoctor.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0/): இயற்கை வேளாண்மை அல்லது நஞ்சில்லா விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இவ்வேளாண்மை முறை தொன்று தொட்டு விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வந்தாலும் பசுமை புரட்சியின் எதிர் மறை விளைவுகளை உணர்ந்த பின்னர் மீண்டும் புத்துயிர் பெற மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளிக்கின்றன. இயற்கை வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணின் வளத்தை காப்பதோடு மட்டுமல்லாமல், மண் வளம் அதிகரிக்கவும் வழி வகை செய்கின்றன. இந்த முறையில் இரசாயன உரங்கள், பூச்சி, பூஞ்சாணக் கொல்லிகள் மற்றும் களைக் கொல்லிகள் முழுவதுமாக பயன்படுத்தப்படுவதில்லை. இதன் மூலம் நஞ்சில்லா மாசற்ற சுற்றுச் சு+ழலில் நல்ல பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலினைப் பெற முடிகின்றது என இயற்கை வேளாண்மையில் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்சியாளர் வேளாண்மை அலுவலர் பெ.லதா தெரிவிக்கிறார். இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் வளர்ச்சி ஊக்கிகளில் முதன்மையானது பீஜாமிர்தம் ஆகும். இதைப்பற்றி இங்கு விரிவாக காண்போம். இது விதை நேர்த்தி செய்ய […] - [வேளாண் விளைபொருட்களில் மதிப்புக்கூட்டல் குறித்த விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae/): விருதுநகர், ஜூலை 12 விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் அனுப்பன்குளம் கிராமத்தில் விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த தொழில்நுட்பபயிற்சி நடைபெற்றது. இது குறித்து சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ப.சுந்தரவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிவகாசி வட்டாரத்தில் 2024-25ம் நிதியாண்டில் அனுப்பன்குளம் கிராமத்தில் விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சியானது நடைபெற்றது. இப்பயிற்சிக்கு சிவகாசி, வேளாண்மை உதவி இயக்குநர் ப.சுந்தரவள்ளி தலைமையேற்று வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படும் இடுபொருட்களான நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் பற்றியும், அவற்றினை பயன்படுத்தும் முறைகள் மற்றும் அவற்றின் நன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். விருதுநகர் மாவட்ட தொழில் மைய தொழில்நுட்ப அலுவலர் மாரீஸ்வரி கலந்து கொண்டு தானியங்கள், பயறுவகைகள் மற்றும் இதர விளைபொருட்களில் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பம் பற்றியும், மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் தொழில் முனைவோருக்கு அரசு வழங்கும் நிதியுதவி, […] - [சூலூரில் சோளம் முதிர்ச்சி பருவ ஆய்வுப்பணி](https://agridoctor.in/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/): கோயம்புத்தூர், ஜூலை 12 கோவை மாவட்டம், சூலூர் வட்டாரத்தில் சித்திரை, பட்டத்தில் விதைத்த சோளம் விதைப்பண்ணைகளில் தற்போது முதிர்ச்சி பருவம் மற்றும் அறுவடை பருவம் காணப்படுகின்றது. சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் சோளம் விதைப்பண்ணையில் நேற்று ஆய்வு செய்த கோவை விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்றுத் துறை உதவி இயக்குநர், பி.ஆ.மாரிமுத்து கூறியதாவது, தற்சமயம் சித்திரை பட்டத்தில் அமைத்த சோளம் விதைப்பண்ணைகள் முதிர்ச்சி பருவம் அடைந்துள்ளது. விதைத்தரத்தினை நிர்ணயிக்கும் கலவன் கணக்கீடு, விதை வழி பரவும் நோய்களான கரிப்பூட்டை , சோரி கெர்னல் ஸ்மட் போன்றவற்றின் கணக்கீடு இப்பருவத்தில் மேற்கொள்ளப்படும். இதனால் அடுத்த பயிர் தலைமுறையில் நோய் தாக்குதல் இன்றி இனத்தூய்மை பாதுகாக்கப்பட்டு சிறந்த தரத்திலான விதைகள் விவசாயிகளுக்கு வழங்க முடியும். மேலும் அறுவடையான பின் விதைக் குவியல்களில் பரிந்துரைக்கப்பட்ட நீர்தயப்பு (12ரூ) அளவுக்குள் இருப்பதையும் உறுதி செய்யப்படுகிறது. இதனால் நீண்ட நாள் விதை இருப்பு வைக்க முடியும். இறுதியாக “தமிழ்நாடு சான்று பெற்ற விதைகள்” […] - [மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): சேலம், ஜூலை 12 சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டாரம், தலைச்சோலை பஞ்சாயத்தில் வேளாண்மை துறை ஆத்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான பயிற்சி மண்புழு உரம் தயாரித்தல் என்னும் தலைப்பின் கீழ் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு ஆத்மா சேர்மன் தங்கசாமி தலைமை வகித்தார். மேலும் மண்புழு உரம் எவ்வாறு தயாரிப்பது அது எந்தெந்த பயிர்களுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் முனைவர் செந்தில்குமார், பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் இப்பயிற்சியின் போது தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் மாலதி, கலந்து கொண்டு விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார். மேலும் இப்பயிற்சியில் தோட்டக்கலை உதவி அலுவலர் ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டார். இப்பயிற்சிக்கான முழு ஏற்பாடுகளையும் ஏற்காடு வட்டார ஆத்மா அலுவலர்கள் துரையரசு அருண்குமார் மேற்கொண்டிருந்தனர். - [உச்சிப்புளி வட்டாரத்தில் மண்புழு உர உற்பத்தி பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): இராமநாதபுரம், ஜூலை 11 இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி வட்டாரத்தில் 2024-25 ஆம் நிதியாண்டில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுனை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பாண்டில் தேர்வாகியுள்ள கும்பரம் கிராமத்தில் 40 விவசாயிகளுக்கு மண்புழு உர உற்பத்தி சம்பந்தமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் வேளாண்மை அலுவலர் சபிதா பேகம், மண்புழு உர உற்பத்தி முறைகள்,மண்புழு இரகங்கள் தேர்ந்தெடுத்தல், உரம் தயாரிக்க உகந்த கழிவுகள், தண்ணீர் தெளிக்கும் முறை, மண் புழு உர அறுவடை,மண் புழு உரத்தின் நன்மைகள் குறித்து விளக்கி கூறினார். மேலும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் பற்றி விரிவாக கூறினார்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி விவசாயிகளிடம், முதலமைச்சரின் மண்னுயிர் காத்து மண்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் […] - [விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தி பயிர் உற்பத்தியை பெருக்கும் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/): சேலம், ஜூலை 11 சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி உமையாள்புரம் கிராமத்தில், பயறு வகை பயிர்களில் சான்று பெற்ற விதை நேர்த்தி விதைகளை பயன்படுத்தி உயிர் உற்பத்தியை பெருக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதற்காக டாக்டர் நடராஜன், இணைப் பேராசிரியர், மரவள்ளி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூரில் இருந்து வருகை புரிந்தார். இப்பயிற்சிக்கு அட்மா திட்டத்தின் உறுப்பினர் சிவக்குமார், முன்னிலை வகித்தார்.பயறு வகை பயிர்களில் சரியான விதைத்தேர்வு, விதை நேர்த்தி பயிர் உற்பத்தி போன்ற அனைத்தையும் விவசாயிகளுக்கு மிகத் தெளிவாக இணை பேராசிரியர் நடராஜன் எடுத்துக் கூறினார். மேலும் இக்கூட்டத்திற்கு டாக்டர் மஞ்சு ரேகா, கால்நடை துறை மருத்துவர், யுவராஜா, உதவி ஆய்வாளர் பட்டு வளர்ச்சி துறை, சுமித்ரா, வேளாண் வணிகத்துறை, ஆகியோர் அந்தந்த துறை […] - [ஆர்ஏடி ஐஎப்எஸ் தொழில்நுட்ப விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது](https://agridoctor.in/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%8f%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%90%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f/): திண்டுக்கல், ஜூலை 11 திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் தருமத்துப்பட்டி கிராமத்தில் ஆர்ஏடி ஐஎப்எஸ் தொழில்நுட்ப விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.இப்பயிற்சிக்கு தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் தலைமை வகித்தார். எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் செல்வமுகிலன் விவசாயிகள் கூட்டு பண்ணைய முறையில் விவசாயம் செய்தல் மற்றும் ஆடு மாடு வளர்ப்பு மற்றும் இயற்கை முறையில் பண்ணையம் செய்வது பற்றி விளக்கி கூறினார். இப்பபிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன் வேளாண்மை துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி விவசாயிகள் அனைவரும் மண்பரிசோதனை செய்து அதன்படி உரமிட வலியுறுத்தினார். உதவி வேளாண்மை அலுவலர் ராஜி இப்பயிற்சியில் கலந்து கொண்டு விவசாயிகள் பயன் பெறுமாறு கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு அருண்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். - [நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் வெளிவளாக பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-2/): கடலூர், ஜூலை 11 நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி 11.7.24 அன்று திருமலைஅகரம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.நடராஜன், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள்கள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர இரகங்கள் பற்றியும்;, விதை உற்பத்தி செய்யும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்;. முனைவர் ஜெ.ஜெயகுமார் விவசாயிகளுக்கு நெல்லில் காணப்படும் பூச்சி நோய் தாக்குதலும் அதன் மேலாண்மை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஆகியவை விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் செயல்முறையாகவும் காண்பிக்கப்பட்டது. தவேபக. இணையத்தள செயலிகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றி விளக்கமாக கூறப்பட்டது. பயிர் காப்பீட்டு திட்டம் பற்றிய விளக்கங்களை வங்கி கள பணியாளர்கள் எடுத்துரைத்தனர். இறுதியாக விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகளிடம் தனது ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர். […] - [ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகள் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/): மதுரை, ஜூலை 11 விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டாரம் மம்சாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் பயிற்சி ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் வெம்பக்கோட்டை தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் மம்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் த.மாரியம்மாள் சிறப்பு விருந்துநராக கலந்துகொண்டார். இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் சுமதி, கலந்து கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையம் தொடர்பாக சிறப்புரையாற்றினார். வேளாண்மை அலுவலர் அண்ணபூரணி, உயிர் உரங்கள் நுண்ணூட்ட கலவை பயன்பாடுகள் மற்றும் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைத்தார். தூண்டில்காளை, தொழில்நுட்ப வல்லுநர், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் மண்வளம் தொடர்பாக பயிற்சியளித்தார். முத்துசரவணன், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, வேளாண் சந்தை மற்றும் மதிப்புகூட்டுதல் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். மாவட்ட தொழில் மையம் சுதாகர், சிறு குறு வேளாண் தொழில்கள் துவங்குவது தொடர்பாக எடுத்துரைத்தார். கருப்பசாமி, உதவி வேளாண்மை அலுவலர், மண் மாதிரி […] - [பயறுவகைப் பயிர்களில் சான்று விதையின் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாட்டு தொழில்நுட்ப பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9/): மதுரை, ஜூலை 11 மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் 2024-25ம் ஆண்டு நிதியின் கீழ் கவுண்டன்பட்டி கிராமத்தில் பயறுவகைப் பயிர்களில் சான்று விதையின் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாட்டு தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி 10.7.24 அன்று மா.விமலா ஒருங்கிணைப்பாளர் / வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் ம.ஹேமலதா வரவேற்புரை ஆற்றினார். ஓய்வு பெற்ற வேளாண்மை அலுவலர் குணசேகரன், பயறுவகை பயிர்களில் சான்று விதையின் முக்கியத்துவம், உயிர் பூஞ்சாணக்கொல்லி டிரைக்கோடெர்மா விரிடி மூலம் விதை நேர்த்தி செய்தல், 2% டி.ஏ.பி கரைசல் தெளித்து பயறுவகை பயிர்களில் அதிக மகசூல் பெற்றிடலாம். பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் காய்துளைப்பான் புழுக்களை கட்டுப்படுத்த இனக்கவர்சிப்பொறி ஏக்கருக்கு 4 எண்கள் வீதம் வைத்து கட்டுப்படுத்தலாம் அல்லது பறவை தாங்கி ஏக்கருக்கு 20 எண்கள் வீதம் வைத்தும் கட்டுப்படுத்தலாம் எனவும் […] - [விவசாய உணவு பொருட்களுக்கான ஏற்றுமதி பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): விருதுநகர், ஜூலை 11 விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டாரம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் 11.7.24 அன்று நடைபெற்ற பயிற்சியில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் த.வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். உரையில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் மற்றும் வேளாண்மையில் அதிக லாபம் ஈட்டுதல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கு.தனலட்சுமி, தலைமை உரையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மாநிலத் திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் மானியங்கள் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறையின் சார்பாக கலந்து கொண்ட மகாலட்சுமி, வேளாண் இடுப்பொருட்களை மதிப்பு கூட்டுதல், வேளாண் இடுபொருட்களை இணையம் வழி விற்பனை செய்தல், வேளாண் இடுப்பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தல், வேளாண் இடுபொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல், ஆகியவை குறித்து விரிவாக […] - [தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துகள் தொழில்நுட்பம் பற்றிய சர்வதேசப் பயிலரங்கம்](https://agridoctor.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-3/): கோயம்புத்தூர், ஜூலை 10 வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், ஜூலை 2 முதல் 9ம் தேதி வரை துகள் தொழில்நுட்பம் (IWPT ‘24) பற்றிய சர்வதேசப் பயிலரங்கு நடைபெற்றது. இப்பயிலரங்கம் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் துகள் மற்றும் தூள் பண்புகளை மையமாகக் கொண்டுள்ளது. சர்வதேச நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ், பங்கேற்பாளர்கள் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் பயன்பாடுகளில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றனர். இப் பயிலரங்கம் தொடக்க விழா கோவையில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரியில் ஜூலை 2 அன்று நடைபெற்றது. வேளாண் பொறியியல் கல்லூரி முதன்மையர் முனைவர் அ.ரவிராஜ், துகள் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சுவைகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்குதல், அமைப்பு மற்றும் அடுக்கு ஆயுளை மேம்படுத்துதல் மற்றும் நானோ மற்றும் மைக்ரோ-அளவிலான துகள்கள் மூலம் ஊட்டச்சத்து உயிர் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அதன் பயன்பாடுகளை எடுத்துக்காட்டினார். வேளாண் […] - [வேளாண்மை துறையின் சார்பாக மானாவாரி நிலக்கடலையில் இயந்திரமாக்கல் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/): இராணிப்பேட்டை, ஜூலை 10வேளாண்மை துறையின் சார்பாக அட்மா திட்டத்தில் மானாவாரி நிலக்கடலை பயிரில் இயந்திரமயமாக்குதல் பயிற்சி இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டாரத்தில் கத்தாரிக்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தலைமை ஏற்று நிலக்கடலையில் இயந்திர மயமாக்குதலின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும், விதை நேர்த்தி, கடினப்படுத்துதல் நன்மைகள், 3 முதல் 5 சென்டிமீட்டர் ஆழத்தில் விதைக்கும் கருவிகள் கொண்டு விதைக்கப்படுவது சாலச் சிறந்தது என்பதையும் விதைப்பது பருவமழைக்கு முந்தையதாக இருத்தல் மிக மிக அவசியம் என்பதையும் விதைகளின் ரகங்கள் குறித்தும் தெளிவாக விளக்கினார். அதனைத் தொடர்ந்து வேளாண்மை அலுவலர் நித்யா, உயிர் உரங்களின் முக்கியத்துவம், விதைநேர்த்திகள் அவற்றின் பங்கு அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து முத்துக்குமார், வேளாண்மை துணை அலுவலர், வேளாண்மை திட்டங்கள் குறித்தும், முதல் அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தினை பற்றியும் வரப்பு பயிர்களின் முக்கியத்துவம் […] - [உழவர் நண்பன் பயிர் மருத்துவர் பயிற்சி முகாம்](https://agridoctor.in/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): திருச்சி, ஜூலை 10 திருச்சி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கிரியா அறக்கட்டளை, திருச்சி மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய உழவர் நண்பன் பயிர் மருத்துவர் பயிற்சி முகாம் லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக பயிற்சி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய வேளாண்மை இணை இயக்குனர் எம். சக்திவேல் “விவசாயிகள் பயிர் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பூச்சி அல்லது நோய் வந்த பின்பு இடு பொருட்களை அளிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே தெரிந்து கொண்டு குறைந்த அளவு இடு பொருட்களை பயன்படுத்தி பயிரைக் காப்பாற்ற முடியும். பெரும்பாலும் விவசாயிகள் ரசாயன மருந்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். பூச்சி மற்றும் நோய் தாக்குதலை பொறுத்தவரை ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகத்தை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். வேளாண்மை துறை மூலம் […] - [வேளாண்மை துறை திட்டங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு](https://agridoctor.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): ஈரோடு, ஜூலை 9 ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் துவரை செயல்விளக்கத்திடல் நாற்று உற்பத்தியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். துவரை விவசாயிகளிடையே மானிய விவரத்தை கேட்டறிந்தார். மேலும் விவசாயிக்கு வழங்கப்பட்ட மானிய விவரங்கள் பற்றியும் நாற்று உற்பத்தி பற்றியும் வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி விளக்கினார். மேலும் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும் பயன்பட்ட விவசாயிகள் மானிய விவரங்கள் மற்றும் பயனடைந்தோர் பற்றிய விளக்கங்களை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். உடன் வேளாண் துறை சார்ந்த சக அலுவலர்கள் இருந்தனர். - [இயற்கை விவசாயத்தின் மூலம் கூடுதல் வருமானம்](https://agridoctor.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae/): மதுரை, ஜூலை 9 மதுரை மாவட்டம், சேடபட்டி வட்டாரத்தில் மள்ளப்புரம் கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் ஆடிப்பட்டத்தில் மானாவாரி விவசாயம் தொடங்கவுள்ளது. தற்போது பெய்யும் மழையைக் கொண்டு கோடை உழவு செய்திட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இயற்கை வேளாண் பயிற்றுநர் பொ.வேலுசாமி பேசுகையில், ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சோளம், மக்காச்சோளம், பருத்தி, பயறு வகைகள், குதிரைவாலி பயிர்களை இயற்கை விவசாயத்தின் மூலம் சாகுபடி செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதாவது பஞ்சகாவ்யம், மீன் கரைசல், இஞ்சி பூண்டு கரைசல், மோர் கரைசல் மற்றும் திரவ அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகிய இயற்கை உரங்களை பயன்படுத்தி பூச்சி, நோய் தாக்குதலின்றி இயற்கை முறையில் அதிக மகசூல் பெற்றிடலாம். விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து அதிக இலாபம் பெறலாம் எனவும் விரிவாக எடுத்துக்கூறினார். இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் இரா.இராமசாமி பேசுகையில் மத்திய மாநில திட்டங்கள் பற்றியும், தரிசு […] - [நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் வெளிவளாக பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/): கடலூர், ஜூலை 9 நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி 8.7.24 அன்று மேல்புளியங்குடி கிராமத்தில் நடைப்பெற்றது. இப்பயிற்சியில் கடலூர் மாவட்டம், விருத்தாசலம், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.நடராஜன், முக்கிய குறிக்கோள்கள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர இரகங்கள் பற்றியும், விதை உற்பத்தி செய்யும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். விவசாயிகளுக்கு நெல்லில் காணப்படும் பூச்சி நோய் தாக்குலும் அதன் மேலாண்மை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஆகியவை விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் செயல்முறையாகவும் காண்பிக்கப்பட்டது. இறுதியாக விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகளிடம் தனது ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இப்பயிற்சியில் கடலூர் மாவட்ட சேர்ந்த முஷ்ணம் வட்டாரத்தில் உள்ள மேல்புளியங்குடி கிராமத்தில் உள்ள விவசாயிகள் 30 க்கும் மேற்பட்டேர் கலந்துக் கொண்டு பயனபெற்றனர். - [பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0/): மதுரை, ஜூலை 9 மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டாரம் வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் 9.7.24 அன்று ஒடைப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ‘பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை” குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கள்ளிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) எம்.கீதா கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். ஒய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குநர் பூவலிங்கம், பயறு வகைப்பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், திரவ உயிர் உரங்களின் பயன்பாடு நுண்ணூட்ட உரங்களின் பயன்பாடு குறித்தும் விவசாயிகளிடம் விரிவாக எடுத்துரைத்தார். கள்ளிக்குடி வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஆ.குமாரிலட்சுமி, வேளாண்மைத்துறையில் செயல்படும் மானியத்திட்டங்கள் பற்றி விளக்கினார். வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சங்கர் கணேஷ் வேளாண் விற்பனைத்துறையின் மானியத்திட்டங்கள் பற்றி விளக்கினார். இப்பகுதி உதவி வேளாண்மை அலுவலர் நாகமோகன், பயிர் […] - [அட்மா திட்டத்தின் விவசாயிகளுக்கு கிராம வேளாண்மை முன்னேற்றக் குழு பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af/): நாமக்கல், ஜூலை 9 ராசாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு ‘கிராம அளவிலான வேளாண்மை முன்னேற்றக் குழுவிற்கு காரீப் பருவப் பயிற்சி’’ வழங்கப்பட்டது. நாமக்கல் வட்டாரம், ராசாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் ‘’கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு காரீப் பருவப் சாகுபடி தொழில் நுட்பங்கள்” குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, தலைமை வகித்து, வேளாண்மைத் துறையின் மானியத்திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், பயிர் காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்டம் விபரங்கள் குறித்து விளக்கமளித்து பயிற்சியளித்தார்.மேலும் சிறப்பு பயிற்றுநர் மாதேஸ்வரன்., துணை வேளாண்மை அலுவலர்., (ஒய்வு) தற்போது பயிரிடப்படும் பயிர்களில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை முறைகள், […] - [பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் நீர் அழுத்த மேலாண்மை பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d/): மதுரை, ஜூலை 9 மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி வட்டாரம், வேளாண்மை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பொட்டப்பட்டி கிராமத்தில் 9.7.24 அன்று கோடை பருவத்தில் பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் நீர் அழுத்த மேலாண்மை குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் 40 விவசாயிகளுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் பொட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா தலைமையற்றார். வேளாண்மை அலுவலர் விக்னேஷ் குமார், முதலமைச்சரின் மண்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றியும், பாரதப் பிரதமரின் விவசாயிகளின் கவுரவ தொகை திட்டம் பற்றியும், நுண்ணீர் பாசன திட்டம் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். உதவி வேளாண் பொறியாளர் கண்ணன், பண்ணை குட்டை, சூரிய மின் மோட்டார் பம்புகள், போன்ற திட்டங்களை பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை கோடை பருவத்தில் பயறு வகை மற்றும் எண்ணெய் […] - [மண்புழு உர உற்பத்தி பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1/): விருதுநகர், ஜூலை 5 விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 2024-25 ஆம் நிதியாண்டில் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பாண்டில் தேர்வாகியுள்ள பூவாணி கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு 4.7.24 அன்று மண்புழு உர உற்பத்தி சம்பந்தமாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கு தனலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். இப்பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக விருதுநகர் வேளாண்மை இணை இயக்குனர் விஜயா தலைமையேற்று முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக் கூறினார். வேளாண்மை துணை இயக்குனர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார், மண்வளத் முக்கியத்துவம் குறித்தும், இயற்கை விவசாயத்தை குறித்தும், ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிப்பதும் குறித்தும் விளக்கினார். மேலும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தோட்டக்கலைத் துறையில் சம்பந்தமான திட்டங்களையும் நுண்ணுயிர் பாசனம் திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி […] - [ஆடிப்பட்டமும், தானியங்களின் அரசி மக்காசோளம் சாகுபடியும்](https://agridoctor.in/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாகக் கருதப்படுகிறது. சராசரி ஆண்டு மழையளவு 861 மி.மீ பெறப்படுகிறது. மக்காச்சோளம் மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் மாவட்டத்தின் மொத்த பயிர் பரப்பளவில் 80 சதவீதம் இடம் பெறுகின்றன. மக்காசோளம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. நீர்த்தேவை குறைவு என்பதாலூம் அதிக மகசூல் திறன் கொண்ட பயிர் என்பதாலும் தானியங்களின் அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆடி மாதமும் விவசாயமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் மக்காசோளம் சாகுபடி அதிக அளவில் செய்யப்படும். கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காசோளம் சாகுபடி சுமார் 71 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தரமான மக்காசோள விதைகளை பயன்படுத்தினால் விவசாயிகள் அதிக விளைச்சலும், கூடுதல் வருமானமும் பெறலாம். மக்காசோளம் விதையின் முளைப்புத்திறன் 90 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். விதைகள் நன்கு திரட்சியாகவும் பதர், பூச்சிகள் மற்றும் நோய் கிருமிகள் அற்று […] - [விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் சூலூர் வட்டாரத்தில் சோளம் விதைப்பண்ணையில் ஆய்வு](https://agridoctor.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): கோவை, ஜூலை 5 கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் சோமனூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட மு-12 விதைப்பணையினை கோவை விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் மாரிமுத்து, விதைச்சான்று அலுவலர், ஹேமலதா மற்றும் உதவி விதை அலுவலர் பெரியகருப்பன் ஆகியோருடன ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் கூறுகையில், நமது உணவு கலாச்சாரத்தில் சிறுதானிய உணவுகளக்கு என்றைக்குமே முக்கிய பங்கு உள்ளது. இதில் சோளம் சார்ந்த பாரம்பரிய உணவுகளான சாதம், களி, ரொட்டி போன்றவையோடு தற்காலத்தில் குழந்தைகளின் விருப்ப உணவுகளான நூடுல்ஸ் கடயமநள பிஸ்கட்ஸ் ஆகியவற்றையும் சிறுதானியத்தில் செய்து இன்றைய தாய்மார்கள் அசத்தி வருகின்றனர். எனவே, அதற்கேற்ற சோள இரக பயிர்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது. இத்தகைய இரகங்களை வேளாண்மைத்துறை மூலமாக மானிய விலையில் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி, விதை உற்பத்தியாளர்களாக்கி விதை உற்பத்தியினை அதிகரிக்க விதைச்சான்றுத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சோளத்தில் மு-12 என்ற இரகம் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது. […] - [மண்ணில் இரசாயன உரங்கள் இடுவதை குறைத்து ஒருங்கிணைந்த நுண்ணூட்டச்சத்துகளை இடுதல் பயிற்சி](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87/): ஈரோடு, ஜூலை 5 ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டாரம், வேளாண்மை – உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டம் மூலம் 2024-25 ஆம் ஆண்டுக்கான உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சியானது மண்ணில் இரசாயன உரங்கள் இடுவதை குறைத்து ஒருங்கிணைந்த நுண்ணூட்டச்சத்துகளை இடுதல் குறித்து திகானரை கிராமத்தில் நடைபெற்றது. இதில் தாளவாடி வட்டார வேளாண்மை அலுவலர் து.விஜய்பாபு தலைமை தாங்கினார். இப்பயிற்சியில் கோபிசெட்டிபாளையம், மைராடா-வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி பச்சையப்பன், கலந்துகொண்டு மண்ணில் அதிகப்படியான இரசாயன உரங்கள் இடுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அதை எவ்வாறு முறையாக இடுவது, பாதிப்பை எவ்வாறு நுண்ணூட்ட சத்துக்கள் இடுவதால் குறையும் என்பது குறித்து தெளிவாகவும், விளக்கமாகவும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். மேலும் மண்ணில் நுண்ணூட்ட சத்துகள் இடுவதால் ஏற்படும் பயன், எந்த பயிர்களுக்கு எந்த மாதிரி நுண்ணூட்டகலவைகள் இட வேண்டும் என்பது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினர். பின் வேளாண்மை அலுவலர் து.விஜய்பாபு, […] - [ஒரு பரு சீவல் நாற்று நடவு முறையில் கரும்பின் விளைச்சலைக் கணித்தல்](https://agridoctor.in/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81/): தற்பொழுது விதைச் செலவினைக் குறைப்பதற்காக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ விதை கரும்பிலிருந்து தேவையான ஒரு பரு சீவல்களாக மாற்றினால் 50 கிலோ எடையளவிற்குள் இருக்கும். மீதமுள்ள 350 கிலோ கரும்பு ஆலைக்கு அனுப்பிவிடலாம்.ஒரு பரு சீவல்களைத் பரு பெயர்த்தெடுக்கும் கருவி மூலம் பெயர்த்தெடுத்து குழிதட்டுகளில் வளர்த்து 30 நாட்களில் ஐந்து முதல் ஆறு இலைகள் உள்ள கரும்பு நாற்றுகளாக நடவு வயலில் 5’x2’ இடைவெளியில் நட வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 4400 பருக்கள் போதுமானது.இதில் சராசரியாக 80 சதம் முளைப்பு திறன் என்று வைத்துக்கொண்டால் ஒரு ஏக்கருக்கு 3520 குத்துகள் இருக்கும்.ஒரு குத்துக்கு 12 கரும்புகள் வீதம் கணக்கிட்டால் ஒரு ஏக்கரில் 42200 கரும்புகள் வயலில் இருக்கும்.இடைவெளி அதிகமாக விட்டு நடுவதால் தனிக்கரும்பின் எடை இரண்டு கிலோ வரை இருக்கும். ஆக ஒரு ஏக்கருக்கு 84 டன் என்றளவில் கரும்பு விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐந்து மீட்டர் நீளத்தில் 96 கரும்புகள் […] - [வாலாஜா வட்டார இயற்கை விவசாய குழுவிற்கு கண்டுனர் சுற்றுலா](https://agridoctor.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5/): இராணிப்பேட்டை, ஜூலை 5 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டார வேளாண்மை துறை சார்பில் உயிர்ம வேளாண்மை குழு விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த பயிற்சி மற்றும் கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், திலகவதி தலைமை வகித்து உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவத்தையும் அதன் பயன்களையும் விவரித்து நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார். மேலும் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள், பயன் பெறும் திட்டங்களை குறித்து விரிவாக கூறினார். வேளாண்மை அலுவலர் நித்யா, திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துவதன் நோக்கங்களையும் மற்றும் அதனால் விவசாயிகள் பெறும் பயன்களையும் மற்றும் பசுந்தால் உரங்கள் பயிரிடுவதும் நன்மைகளையும் விரிவாக எடுத்துக் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் மேகலா, பயிர் சுழற்சி முறைகளையும் பயிர் பாதுகாப்பு முறைகளையும் உயிர்ம வேளாண்மை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து இயற்கை விவசாயி, சண்முகராமன், இயற்கை விவசாய முறைகளையும் அதனால் அவர் அடைந்த நன்மைகளையும் […] - [மண் வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற ஆலோசனை](https://agridoctor.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/): புதுக்கோட்டை, ஜூலை 4 புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், எதிர் வரும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ள இருக்கும் விவசாயிகள் தரிசாக உள்ள தங்கள் நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு அல்லது சணப்பு விதைகளை விதைத்து மடக்கி உழுவதால் மண்வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவித்துள்ளார். மேலும், பசுந்தாள் உரப்பயிர் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ பசுந்தாள் உரப்பயிர் விதைகளை விதைக்க வேண்டும். பின்னர் நன்கு வளர்ந்தவுடன் பூ பூக்கும் தருனத்தில் பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்திட வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை கிரகித்து வேர்முடிச்சுகளில் ரைசோபியம் பாக்டீரியா என்ற நுண்ணுயிர் நிலை நிறுத்துகின்றன. பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்வதனால் தொடர்ந்து வரும் பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கிறது. இவ்வாறு மடக்கி உழவு செய்த வயல்களில் அங்ககச்சத்து அதிகமாகும். இதனால் மண்ணில் […] - [வாழையில் குலைகள் பெரிதாக்க தொழில்நுட்பம்](https://agridoctor.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/): திண்டுக்கல், ஜூலை 4 உலகின் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல பகுதிகளில் மிக முக்கியமான பழப்பயிர் வாழையாகும். மேலும் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியாவில் மிக முக்கிய பழப்பயிராக வாழைப்பழம் விளங்குகிறது. தமிழகம், கேரளா, கர்நாடக, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், ஆகிய மாநிலங்கள் வாழை உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் கொண்ட வாழையின் வளர்ச்சிக்குப் பெருமளவு நீர் மற்றும் ஊட்டச்சத்துத் தேவைப்படுகிறது. நீர் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பின் வாழையின் வளர்ச்சி, குலையின் தரம், பழத்தின் அளவு பாதிக்கப்படுகிறது. வாழையில் குலை தள்ளிய பின் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களைக் கிரகிக்கும் திறன் குறைகிறது. இதனை ஈடு செய்ய வாழையில் குலை ஊட்டல் தொழில்நுட்பம் உதவுகிறது. குலை ஊட்டலுக்குத் தேவையான பொருட்கள்யூரியா- 7.5 கிராம்சல்பேட் ஆஃப் பொட்டஷ் (SOP)- 7.5 கிராம்மாட்டுச்சாணம்- 500 கிராம்தண்ணீர்- 100 மில்லி ஊட்டச்சத்து தயாரிக்கும் முறைமுதலில் ஒரு பெரிய […] ## Pages - [](https://agridoctor.in/) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)