December 27, 2024

அட்மா திட்டத்தில் கலப்பின மீன்கள் வளர்ப்பு விவசாயிகள் பயிற்சி

திருச்சி, ஜூலை 16

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், பண்பு அறம் சுற்றி கிராமத்தில் கலப்பின மீன்கள் வளர்ப்பு விவசாயிகள் பயிற்சியில் ஆரோக்கியசாமி மீன் பண்ணை விவசாயி பேசுகையில் மீன்களின் வகைகள் மீன் குட்டை அமைத்தல் மீன்களுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மை பற்றி விரிவாக விளக்கி கூறினார். அதன் பின்பு சபாஸ்டின் செல்வி பேசுகையில் மீன் வளர்ப்பு முறையில் எவ்வாறு லாபகரமாக பயன்படுத்துதல் பற்றி விரிவாக விளக்கி கூறினார். மேலும் தங்கள் மீன் பண்ணையில் செயல்படுத்தப்படும் வழிமுறைகள் பராமரிப்பு முறைகள், மீன் அமிலம் தயார் செய்தல் பற்றி விரிவாக கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். வேளாண்மை உதவி அலுவலர் ராமசுந்தரம் பேசுகையில் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து மானிய திட்டங்களை பற்றி விரிவாக விளக்கி கூறினார். மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் தக்கை பூண்டு 50% மானிய விலையில் பெற்றுக் கொள்ள விவசாயிகளுக்கு விரிவாக அழைப்பு விடுத்தார். மேலும் குறுவை நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் 31.07.24க்குள் பிரிமிய தொகை செலுத்தி பயன்பெறக் கேட்டுக் கொண்டார். மேலும் விவசாயிகளுக்கு தார்பாய், சிங்சல்பேட், ஜிப்சம், நுண்ணீர்பாசனம் திட்டம் பற்றி விரிவாக விளக்கி கூறினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரிச்செல்வன் பேசுகையில் அட்மா திட்ட செயல்பாடுகள், செயல்விளக்கம், கண்டுணர்வு சுற்றுலா பற்றி விரிவாக விவசாயிகளுக்கு கூறினார். இதற்கான ஏற்பாட்டினை பண்பரம்சுற்றி மீன் பண்ணை விவசாயி ஆரோக்கியசாமி, ராமலிங்கம், கரிகாலன் முன்னோடி விவசாயிகள், உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர்.