February 14, 2025

இந்திய பொதிவாக்க தொழில்நுட்ப கழகப் பயிற்சி

கடலூர், ஆக.7

கடலூர் மாவட்டம், விருத்தாசலம், வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் 5.8.24 மற்றும் 6.8.24 இரண்டு நாட்கள் தொழில்நுட்ப கழக பயிற்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுதுணையோடு, இந்திய பொதிவாக்கத் தொழில் நுட்பகழகம், சென்னை நிதி உதவியோடு, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மேம்படுத்தப்பட்ட உயர்தர பொதிவாக்கத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நடைப்பெற்றது. 60 கும் மேற்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம் மாவட்டஉழவர் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சியில் பேக்கேஜிங் பற்றிய விளக்கமும், காய்கறி, பழங்கள், சமையல் எண்ணெய், பால் பொருட்கள், மசாலா வகைகள், தானியப் பொருட்களை சீராக பேக்கேஜிங் மற்றும் தரக்கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தரக்கட்டுபாடு, பரிசோதனை, விற்பனை முத்திரை மற்றும் பதிவு செய்தல், காப்புரிமை பெறுதல், பேக்கேஜிங் மூலப்பொருள் செய்யும் உற்பத்தியாளர் விவரங்கள் பற்றி இரா.பொன்குமார் (துணை இயக்குநர்), பிரேம் ராஜ் (தொழில்நுட்ப உதவியாளர்), ச.கார்த்திக், வினித் ஆகியோர் விரிவாக இரண்டு நாள் பயிற்சியில் எடுத்துரைத்தனர். இதில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் மற்றும்வேளாண் அலுவலர்கள் பங்கு பெற்றனர். இப்பயிற்சியை முனைவர் க.நடராஜன், வேளாண் அறிவியல் நிலைய, திட்ட ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார். முனைவர்கள் மோதிலால், கண்ணன், ஜெயகுமார், சுகுமாரன், காயத்ரி, கலைச்செல்வி ஆகிய பேராசரியர்களும் பங்கு பெற்றனர். பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.