ஈரோடு, ஆக.5
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை/அங்கக வேளாண் இடுபொருட்கள் தயாரித்தல் பயிற்சி தாசரிபாளையம் கிராமத்தில் 5.8.24 அன்று கு.கற்பகம், வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) தலைமையில் நடைபெற்றது. ப.உமா மகேஸ், வேளாண்மை அலுவலர், மத்திய மற்றும் மாநில திட்டங்கள் மற்றும் உயிர் உரங்கள் உபயோகிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார். சங்கீதா, உதவி பேராசிரியர் JKK கல்லூரி அங்கக வேளாண்மை செய்வதற்கான வழிமுறைகள் பயிர் சுழற்சி மற்றும் அங்கக இடுபொருள் தயாரிக்கும் முறைகள்(பஞ்சகாவ்யா, அமிர்தகரைசல், ஜீவாமிர்தம் மற்றும் பூச்சிவிரட்டி) பூச்சி மேலாண்மை, களை மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கூறினார். சத்தியமங்கலம் வட்டார தொழில்நுட்பமேலாளர் கார்த்திக், உழவன் செயலி பதிவேற்றம் மற்றும் இ வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை சத்தியமங்கலம் உதவி தொழில்நுட்ப
மேலாளர்கள் த.நந்தினி மற்றும் அ.வீரமணி ஆகியோர் செய்திருந்தனர்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை