December 27, 2024

உச்சிப்புளி வட்டாரத்தில் மண்புழு உர உற்பத்தி பயிற்சி

இராமநாதபுரம், ஜூலை 11

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி வட்டாரத்தில் 2024-25 ஆம் நிதியாண்டில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுனை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பாண்டில் தேர்வாகியுள்ள கும்பரம் கிராமத்தில் 40 விவசாயிகளுக்கு மண்புழு உர உற்பத்தி சம்பந்தமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் வேளாண்மை அலுவலர் சபிதா பேகம், மண்புழு உர உற்பத்தி முறைகள்,
மண்புழு இரகங்கள் தேர்ந்தெடுத்தல், உரம் தயாரிக்க உகந்த கழிவுகள், தண்ணீர் தெளிக்கும் முறை, மண் புழு உர அறுவடை,
மண் புழு உரத்தின் நன்மைகள் குறித்து விளக்கி கூறினார். மேலும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் பற்றி விரிவாக கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி விவசாயிகளிடம், முதலமைச்சரின் மண்னுயிர் காத்து மண்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார். மேலும் விவசாயிகளுக்கு உழவன் செயலியின் பயன்பாடு மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பணமில்லா பரிவர்த்தனை குறித்து தொழில்நுட்ப கருத்துக்களை உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் விளக்கி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உச்சிப்புளி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.