January 3, 2025

உதவி விதை அலுவலர்களுக்கு விதைச்சான்று நடைமுறை தொழில்நுட்ப பயிற்சி

கோவை, ஜூன் 24

கோவை மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத் துறையின் மூலம் அனைத்து உதவி விதை அலுவலர்களுக்கு விதைச்சான்று நடைமுறைகள் குறித்து தொழில்நுட்ப பயிற்சி நேற்று வழங்கப்பட்டது. பயிற்சியினை கோவை மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத் துறை உதவி இயக்குநர் பி.ஆ.மாரிமுத்து தலைமையுரை ஆற்றி துவக்கி வைத்தார்.

சான்று விதைகளின் முக்கியத்துவம், விதைப்பறிக்கை தயாரித்தல் விதைப்பண்ணை பதிவு செய்தல், ஆகிய தொழில்நுட்பம் குறித்த பயிற்சியை ஆ.சதாசிவம், விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) வழங்கினார். ஹேமலதா, விதைச்சான்று அலுவலர் (அன்னூர்) வயலாய்வு பணியின் போது கலவன் நீக்குதல், நோய் தாக்கிய பயிரை அகற்றுதல், மகசூல் கணக்கீடு முறை, பயிர் ரகங்களின் குணாதியங்களை கண்டறிதல் பற்றி எடுத்துரைத்தார். மேலும், செ.நந்தினி, விதைச்சான்று அலுவலர் (பொள்ளாச்சி) விதை சுத்தி பணிகள் மற்றும் சான்றளிப்பு பணிகள் குறித்தும், பதிவேடு பராமரிப்பு மற்றும் சுத்தி பணியின் போது கவனிக்க வேண்டியவை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். கோவை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விதை உதவி அலுவலர்கள் ப.பிரியதர்ஷினி, விதைச்சான்று அலுவலர், கோவை மற்றும் ரா.செல்லம்மாள், விதைச்சான்று அலுவலர், தொண்டாமுத்தூர் ஆகியோர் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். இறுதியில் விதைச்சான்று அலுவலர் (துடியலூர்) க.பாரதி நன்றி கூறினார்.