சேலம், ஆக.1
வேளாண்மை துறையின் சார்பாக ஆத்மா திட்டத்தில் கடப்பேரி கிராமத்தில் உயிர்ம இடுப்பொருள் உற்பத்தி பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி
இயக்குனர் திலகவதி தலைç மயேற்று வேளாண் துறை சார்ந்த திட்டங்களான மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், பயறு வகை பயிர்களை வரப்பு
பயிர்களாகவும் ஊடு பயிர்களாகவும் பயிரிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள், சணப்பை, தக்க பூண்டு போன்ற தழைசத்து கொண்ட பயிர்களை பயிரிடுதல்
அவற்றை மக்கச் செய்து மண்ணிற்கு தழைச்சத்தை எவ்வாறு அளித்தல், பயறு வகை பயிர்களை பயிர் செய்வது மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
குறித்தும் தெளிவாக விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து தேவேந்திரன் அங்கக பண்ணைய
விவசாயி, உயிர்ம இடு பொருட்களை எவ்வாறு தயாரிப்பது அவற்றை எவ்வாறு பயன்படு த்துதல் , மண்ணை வளப்படுத்த தானியங்களை பயிரிட்டு உழுதல்,
தக்க பூண்டு, சணப்பை பயிரிட்டு உழுவதால் ஏற்படும் நன்மைகள், மண்ணை வளப்படுத்த மண்புழு தயாரிக்கும் முறைகள், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம்
தயாரித்தல், மீன் அமிலத்தின் முக்கியத்துவம், பஞ்சகாவியா தயாரித்தலை செயல் விளக்கங்கள் மேலும் பயிர் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் தெளிவாக
விளக்கமளித்தார்.
தொடர்ந்து வேளாண்மை அலுவலர் நித்யா உழவன் செயலி , மண்வளத்தை எவ்வாறு கண்டறிதல், நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை
எவ்வாறு கண்டறிதல் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளை விளக்கினார் . தொடர்ந்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் சசிகலா, பயிர்களில் பூச்சிகளை
கட்டுப்படுத்த ஆடு திண்ணா ஐந்து இலைகளை கோமியத்தில் கலந்து பதப்படுத்தி பூச்சிகளை எவ்வாறு விரட்டுதல், மீன் கழிவுகளுடன் வெள்ளத்தை சேர்த்து
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை