December 26, 2024

எஸ்.புதூர் வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி

சிவகங்கை, ஜூலை 18

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரத்தில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி மின்னமலைபட்டி வருவாய் கிராமத்தில் 18.7.24 அன்று நடத்தபட்டது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி தலைமை வகித்தார். வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையம், செட்டிநாடு இணை பேராசிரியர், டாக்டர் ஜெயராமசந்திரன் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி தொழில்பட்பங்கள் பற்றியும் அதன் மகசூல் விபரம் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். கதிரி லெபாக்ஷி இரகம் மற்றும் நாட்டு இரகங்களின் குணாதிசய முறைகள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். துணை வேளாண்மை அலுவலர் பாலமுருகன், பயிற்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள தொழில் நுட்பங்களை விரிவாக எடுத்து கூறினார். விதை நேர்த்தி செய்து விதைக்கும் முறை பற்றியும் விதை நேர்த்தி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். உதவி விதை அலுவலர் முத்துரெத்தினம், பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விதை பண்ணை அமைக்கும் முறை பற்றியும் விதை பண்ணை அமைப்பதற்க்கு உண்டான அணுகுமுறை பற்றியும் தேவைப்படும் ஆவணங்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் அ.கார்த்திக் ராஜா, பயிற்சயில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெ.ஸ்ரீரங்கசெல்வி பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விதை நேர்த்தி செய்யும் முறை பற்றி எடுத்து கூறி விதை நேர்த்தி செயல்விளக்கம் செய்து காண்பித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் ம.விஜய்ஆனந்த் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு அட்மா திட்டம் பற்றியும் அ தன் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார் மற்றும் பயிற்சிக்கு உண்டான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.