December 22, 2024

எஸ்.புதூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

சிவகங்கை, ஆக.7

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரம், அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி மானாவாரி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் வேளாண் விரிவாக்க மையம் எஸ்.புதூரில் 29.7.24 அன்று நடத்தபட்டது.

இப்பயிற்சிக்கு எஸ்.புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி, பயிற்சியினை தொடங்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். தோட்டக்கலைதுறை உதவி இயக்குநர் சரவணன், தோட்டக்கலைத் துறையின் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்கள் மற்றும் மானிய விலைகள் பற்றியும் அதன் விபரங்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார் . ப.கார்த்திகா, ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் பற்றியும் அதன் மூலம் வழங்கப்படும் இடுபொருட்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார் . பயிற்சிக்குகுன்றக்குடி உதவி பேராசிரியர் விமலேந்திரன் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்டவிவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையத்தின் பயிர்கள் வளர்ச்சி முறை மற்றும் தீவன பயிர்கள் சாகுபடி முறை செய்யும் முறை மற்றும் பண்ணைகுட்டைகள் அமைப்பதன் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். துணை வேளாண்மைஅலுவலர் பாலமுருகன், பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையத்தின் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள் பற்றியும் அதன் வழிமுறைகள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் அழகர், பயிற்ச்சியில் கலந்துகொண்டவிவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தபடும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாகஎடுத்து கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெ.ஸ்ரீரங்கசெல்வி பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு. அட்மா திட்டம் பற்றியும் அதன் மூலம் நடத்தபடும் விவசாயிகள் பயிற்சியிகள் மற்றும் செயல்விளக்கம் மற்றும் கண்டு ணர்வு சுற்றுலாபற்றியும் விரிவாக எடுத்து கூறினார் . பயிற்சிக்குண்டான ஏற்பாடுகளை விஜய் ஆனந்த் உதவி தொழில் நுட்ப மேலாளர் செய்திருந்தார்.