December 6, 2024

கொடுமுடி வட்டாரத்தில் தாவர வளர்ச்சி யூக்கிகள் மூலம் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சி

ஈரோடு, ஜூலை 18

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரம், தேவம்பாளையம் கிராமத்தில் தாவர வளர்ச்சி யூக்கிகள் மூலம் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொ.யசோதா, தலைமையேற்று துவங்கி வைத்தார். இப்பயிற்சியில் பேராசிரியர் சீனிவாசன், பயிர் பாதுகாப்புத்துறை, கே.வி.கே.மைராடா, கோபி, தாவர வளர்ச்சி யூக்கிகள் மூலம் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விரிவாகவும், செயல்விளக்கம் மூலம் தெளிவாக விளக்கி கூறினார். உழவர் உற்பத்தியாளர் குழு முதன்மை செயல் அலுவலர், மதிப்பு கூட்டல் முறைகளையும் அதன் பயன்களையும் தெளிவாக விளக்கினார். சுகன்யா, வேளாண்மை அலுவலர், வேளாண் உற்பத்தி மற்றும் வணிகம், தனது துறை சார்ந்த திட்டங்களை விரிவாக கூறினார். நாகராஜன், உதவி வேளாண்மை அலுவலர், வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களையும் திரவ உயிர் உரங்கள் பயன்பாடுகளை எடுத்து கூறினார். மேலும் உதவி வேளாண்மை அலுவலர்கள் வெங்கடேஷ் மற்றும் மாதவன் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.