கோயம்புத்தூர், ஆக.3
கோவை மாவட்டம் சர்கார்சாமக்குளம் வட்டாரத்தில் நடப்பாண்டு வேளாண்மை துறையினால் விதை உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள சோளம், கம்பு அரசு விதைப்பண்ணைகளை விதைச்சான்றளிப்புமற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் பி.ஆ. மாரிமுத்து ஆய்வு செய்தார்.
இனத்தூய்மை, புறத்தூய்மை மற்றும் நல்ல முளைப்புத்திறன் கொண்ட சான்று விதை விவசாயிகளை சென்று அடைய அரசு விதைப்பண்ணை அமைத்து விதைச்சான்றளிப்பு அலுவலர்களால் பயிர்களின் முக்கிய பருவங்களில் ஆய்வு செய்யப்பட்டு, விதை சுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டபின் விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விதை ஆதாரம், சான்று நிலைக்குரிய குறைந்தபட்ச விதை தர நிலையில் தேர்ச்சி பெற்ற பின்பு சான்று அட்டைகள் பொருத்தப்படும்.
தற்போது சர்கார் சாமக்குளம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பு கோ-10 ஆதாரநிலை2 விதைப்பண்ணையை விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் பி.ஆ. மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டு , வயல் தர காரணிகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் கம்பு கோ-10 இரகமானது 85-90 நாளில்அறுவடைக்கு தயாராகும். செடி-160-180 செ.மீஉயரமும், கதிர் 25-30 செ.மீ உயரமும் கொண்டு தானியம்- சாம்பல் பழுப்பு நிறமாக காணப்படும். இதில் புரதச்சத்து 12.07 சதவீதம் உள்ளது. சிறுதானியத்திற்கான முக்கியத்துவம் மக்களிடையேஅதிகரித்து வரும் நிலையில் இது போன்ற புரதச்சத்து அதிகமுடைய கம்பு இரகத்தினை சாகுபடி செய்தும், விதைப்பண்ணையாக அமைத்தும் சிறுதானியவிதைஉற்பத்தியைஅதிகரிக்கலாம் என்றுஅவர் தெரிவித்தார்.இவ்வாறுஅமைக்கப்படும் கம்புவிதைப்பண்ணையில் பயிர் விலகுதூரம் ஆதாரநிலை எனின் 400 மீ மற்றும் சா ன்றுநிலைஎனின் 200 மீட்டரும் கடைப்பிடிக்கப்படவேண்டும். பிறரககலவன்கள்மற்றும் குறித்தறிவிக்கப்பட்டநோயானஅடிச்சாம்பல், தானியக்கரிப்பூட்டை, நோயினால் பாதி ப்படைந்தபயிர்கள்ஆதாரநிலைஎனில் 0.05 சதவீதம் மற்றும் சான்றுநிலைஎனில் 0.1 சதவீதம் மட்டுமேஅனுமதிக்கப்படும். இதில்தேர்ச்சி அடையாதவிதைப்பண்ணைகள்வயல்அளவிலையேதள்ளுபடிசெய்யப்படும்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை