December 26, 2024

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாநில அளவிலான மாபெரும் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி

திருச்சி, ஜுலை 30

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், செயல்முறை விளக்கப் பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவை வழங்கப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு வேளாண்ç மப் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்ககம், பயிர் மேலாண்மை இயக்ககம், பயிர் வினையியல்துறை மற்றும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்தும் விவசாயிகளுக்கான மாநில அளவிலான மாபெரும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் அதன் நிவர்த்தி முறைகள் என்ற தலைப்பில் 7.8.24 (புதன்கிழமை) அன்று காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. பொதுவாக பயிர் சாகுபடியில் மகசூல் இழப்புக்கு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் பயிர் வினையியல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளே காரணம் ஆகும்.
இதனை கருத்தில் கொண்டு இந்த கருத்தரங்கில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்படும் பயிர் வினையியல் குறைபாடுகள், ஊட்டச்சத்து பற்றாக்குறைகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அரசு அலுவலர்கள் மற்றும் அனுபவ விவசாயிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆர்வமுள்ளவிவசாயிகள் ஜுமிமிஸ்ரீவி://dலிஉவி.ஆலிலிஆயிள.உலிது/க்ஷூலி௸துவி/d/1ளல்ஹிஸியூ1ஸ்ரீவக்ஷூலிஸறூயூஜுலுழி1ளளஹி9க்ஷுஞலியூஞயீனிரீகுநுநுதீ1ஐ1ணுக்ஷுளீழபு க்ஷிக்ஷு என்ற லிங்கில் முன்பதிவு செய்யவும். 9171717832 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் முன் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2962854, 917171 7832, 82484 85377, 85088 35287, 88381 26730 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட தகவல்களை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ராஜாபாபு தெரிவித்தார்.