October 31, 2024

தலைவாசல் வட்டாரத்தில் பயறு வகை பயிர்களில் விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாடு பயிற்சி

சேலம், ஜூலை 26

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் புனல்வாசல் கிராமத்தில் அட்மா திட்டத்தில் வேளாண்மை துறை சார்பாக பயிர் வகை பயிர்களில் விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாடு குறித்து பயிற்சி அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வட்டார தொழில்நுட்பம் மேலாளர் சக்தி அனைவரையும் வரவேற்று இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கூறினார். இப்பயிற்சியில் தலைவாசல் வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா பேசுகையில் தமிழ்நாடு அரசின் பசுமை போர்வை திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்கும் திட்டம், நுண்ணீர் பாசனம் சான்று விதைகளின் அவசியம் குறித்து பேசினார். விதை சான்று மற்றும் உயிர்மச்சான்று வேளாண்மை உதவி இயக்குனர் நவநீதகிருஷ்ணன் பேசுகையில் பயிர் வகை பயிர்களில் விதை நேர்த்தி செய்யும் முறைகள் மற்றும் விதை உற்பத்தி வழிமுறைகளை எடுத்துரைத்தார். சான்று விதை உற்பத்தியின் மூலம் கூடுதல் வருமானம் உழவர்களுக்கு கிடைக்கும் என கூறினார். விதை சான்று அலுவல சுரேந்திரன் தனது உரையில் உயிர் உரங்களின் பயன், நுண்ணூட்ட சத்துக்களை பயன்படுத்தும் வழிகள் குறித்து கூறினார். துணை வேளாண்மை அலுவலர் மணவழகன் விவசாயிகளிடம் பேசுகையில் தரமான விதையை கூடுதல் லாபம் தரும் என்பதையும் விதை நேர்த்தியின் அவசியம் குறித்தும் கூறினார். அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், முத்துவேல், உதவி தோட்டக்கலை அலுவலர் ஐயப்பன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் ராஜலட்சுமி பங்கேற்று தங்கள் துறைகள் மூலம் செயல்படும் திட்டங்களை கூறினர். உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ் நன்றி கூறினார்.