November 7, 2024

நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் வெளிவளாக பயிற்சி

கடலூர், ஜூலை 11

நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி 11.7.24 அன்று திருமலைஅகரம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.நடராஜன், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள்கள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர இரகங்கள் பற்றியும்;, விதை உற்பத்தி செய்யும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்;. முனைவர் ஜெ.ஜெயகுமார் விவசாயிகளுக்கு நெல்லில் காணப்படும் பூச்சி நோய் தாக்குதலும் அதன் மேலாண்மை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஆகியவை விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் செயல்முறையாகவும் காண்பிக்கப்பட்டது. தவேபக. இணையத்தள செயலிகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றி விளக்கமாக கூறப்பட்டது. பயிர் காப்பீட்டு திட்டம் பற்றிய விளக்கங்களை வங்கி கள பணியாளர்கள் எடுத்துரைத்தனர். இறுதியாக விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகளிடம் தனது ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இப்பயிற்சியில் கடலூர் மாவட்ட சேர்ந்த நல்லூர் வட்டாரத்தில் உள்ள திருமலைஅகரம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.