October 12, 2024

பயறுவகை பயிர்களில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை விவசாயிகள் பயிற்சி

சிவகங்கை, ஆக.5

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் வேளாண்மைத்;துறையின் மூலம் அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி பயறுவகை பயிர்களில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு வேதியரேந்தல் கிராமத்தில் பயிற்சிஅளிக்கப்பட்டது.

இப்பயிற்சிக்கு மானாமதுரை வேளாண்மை உதவி இயக்குநர் ஜா.இரவிசங்கர் பயிற்சியினை தொடங்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். சேதுபாஸ்கர வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிபேராசிரியர் முனைவர் கனிமொழி, சமச்சீர் உரமிடல் மற்றும் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து பயன்படுத்தும் உத்திகள் பற்றிய தொழில்நுட்பகளை எடுத்துக்கூறினார். மானாமதுரை துணை வேளாண்மை அலுவலர் நா.சப்பாணிமுத்து, நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறையில் செயல்பத்தப்படும் மானிய தி ட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் க.அமிர்தலட்சுமி உதவி தொழில்நுட்பமேலாளர்கள் திவ்யா, வினோத்குமார் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் சே.அனுசுயாதேவி அனைவருக்கும் நன்றி கூறினார்.