October 31, 2024

பவானி வட்டாரத்தில் பயிறுவகை பயிர்களின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ஈரோடு, ஜூலை 15

ஈரோடு மாவட்டம், பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பயிறுவகை பயிர்களின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொடர்பான பயிற்சி மைலம்பாடி கிராமத்தில் 11.7.24 அன்று நடைபெற்றது. ம.கனிமொழி, வேளாண்மை உதவி இயக்குநர், பவானி வேளாண்மை திட்டங்கள் மற்றும் துவரை நடவுமுறை பயிரிட்டு அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினார். செல்வகுமார், உதவி பேராசிரியர், குமரகுரு வேளாண்மை கல்லூரி, ஆப்பக்கூடல், துவரை பயிரில் விதை நேர்த்தி முறைகள் மற்றும் நாற்றங்கால் அமைப்பது, ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கூறினார். தமிழரசு, அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர், துவரை பயிரில் விதை தேர்வு முறை, விதைப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், மதிப்புக்கூட்டுதல் குறித்து ஆலோசனை கூறினார். சித்தையன், உதவி வேளாண்மை அலுவலர் வேளாண்மை திட்டங்கள் குறித்து கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் லோ.கங்கா, உழவன் செயலி பதிவேற்றம், இ நாம் மற்றும் இ வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார். மணிகண்டன் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நன்றியுரை கூறினார்.