November 7, 2024

புதுப்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு காரிப் விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூன் 26

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி வட்டாரத்தில் 26.6.24 அன்று வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் A.புதுப்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு, காரிப் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார். வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் வேளாண்மை அலுவலர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் உள்ள மாநிலத் திட்டங்கள் மற்றும் அரசின் திட்டங்களை விளக்கி கூறினர். உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன், வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருள்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். கிருஷ்ணா கல்லூரி உதவி பேராசிரியர் ஜெயமுருகன் காரிப் பருவ பயிற்சியில் பயிரிடும் முறை மற்றும் அதன் தொழில்நுட்ப முறைகளை விளக்கி கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சண்முகப்பிரியா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பழனி, பயிர் சாகுபடி முறைகள் மற்றும் மண் மாதிரி எடுத்தல் முதலிய தொழில்நுட்ப முறைகளை எடுத்துக் கூறினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் சிவபாண்டி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.