October 11, 2024

பெருந்துறை வட்டாரத்தில் இயற்கை வேளாண்மை இடுபொருள்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி

ஈரோடு, ஆக.7

ஈரோடு வட்டாரம், பெருந்துறை வட்டாரம், வேளாண்மை – உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் கருக்குபாளையம் வருவாய் கிராமத்தில் 7.8.24 அன்று உழவர்களுக்கு இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது. பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.பிரசாத் தலைமையேற்று பேசுகையில் இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் குறித்தும் அவற்றை கட்டுப்படுத்தம் முறை குறித்தும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் பற்றியும் தெளிவாக விளக்கினார். மேலும் இயற்கை விவசாயி கணேசன், பேசுகையில் அங்கக வேளாண்மை செய்வதற்கான வழிமுறைகள் பயிர் சுழற்சி மற்றும் அங்கக இடுபொருள் தயாரிக்கும் முறைகள் (பஞ்சகாவ்யா, அமிர்தகரைசல், ஜீவாமிர்தம், மற்றும் பூச்சி மேலாண்மை, களைமேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கூறினார். இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் அருள்மொழிவர்மன், பேசுகையில் துவரை வரிசை நடவு முறைகள் பற்றியும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும் வேளாண் கிடங்கில் உள்ள இடுபொருட்களின் மானிய விவரங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் கலைச்செல்வி பேசுகையில் நுண்ணீர் பாசனம் மற்றும் Pஆ முளையஐ பற்றியும் விவரங்களை கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளார்கள் விசுவநாதன் மற்றும் தாமோதரன் அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளார்கள் செய்திருந்தனர்.