December 6, 2024

மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி

இராமநாதபுரம், ஆக.9

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரம், வேளாண்மை துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு உள்ளான விவசாயிகள் பயிற்சி மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி வேளாண் விரிவாக்க மையம் உச்சிப்புளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முனைவர் வள்ளல் கண்ணன் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம் முன்னிலை வகித்தார். பானுமதி வட்டார தொழில்நுட்ப மேலாளர் உச்சிப்புளி துறை அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்களை வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடியில் ரகம் தேர்வு விதை அளவு,பயிர் இடைவெளி,
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, மானாவாரி நிலக்கடலை சாகுபடிக்கு வி ஆர் ஐ-9 மற்றும் டி எம் வி-13 ஆகிய ரகங்கள் மிகவும் ஏற்றது. வி ஆர் ஐ -9. ( 110) நாட்களிலே அறுவடைக்கு தயாராகி விடுகின்றது. மேலும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. இது போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து மானாவாரியில் நல்ல மகசூல் பெறலாம் எனக் கூ றினார். மேலும் நிலக்கடலை சாகுபடியில் ஜிப்சம் இட்டு மண் அணைப்பது மிக முக்கியமான தொழில்நுட்பம் விதைப்பு செய்து 35 நாட்கள் கழித்து ஒரு ஹெக்டேருக்கு 200 கிலோ வீதம் ஜிப்சம் இடவேண்டும். ஜிப்சம் இடுவதனால் நன்கு திரட்சியான காய்கள் மற்றும் எண்ணெய் சத்து நிறைந்த காய்கள் கிடைக்கும் என கூறினார்

பயிற்சி முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் நன்றியுரை கூறினார். பயிற்சியில் குயவன்குடி மானாங்குடி ,பிரப்பன்வலசை, கும்பரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 40க்கும் ¼ மற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்சி முடிவில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.