February 14, 2025

மண்ணச்சநல்லூர் விவசாயிகளுக்கு காரீப் பருவ பயிற்சி

திருச்சி, ஜூன் 24

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் நடத்தப்பட்ட காரிப் பருவ பயிற்சி ஆனது 2024-25 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து திட்ட கிராமத்தில் கிராம அளவிலான விவசாயிகள் முன்னேற்ற குழு கூட்ட பயிற்சியானது எதுமலை கிராமத்தில் நடத்தப்பட்டது.

மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு பரமசிவம் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார். மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் மண்பரிசோதனையின் முடிவின்படி, உர பரிந்துரைப்படி சாகுபடி செய்யும் பொழுது விவசாயிகளுக்கு உரச் செலவு கணிசமாக குறையும் என்பதையும் தெரிவித்தார் மற்றும் காரிப் பருவ பயிர்களான மக்காச்சோளம் பருத்தி, சோளம், கம்பு பயிர்களை பருவம் சார்ந்த சாகுபடி செய்யவும் எடுத்துக் கூறினார். துணை வேளாண் அலுவலர் சின்ன பாண்டி, இயந்திர நடவு பிஎம் கிசான் திட்டம் பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் கிராம முன்னேற்ற குழுவின் செயல்பாடு, அமைப்பு, நோக்கம் பற்றியும் எடுத்துக் கூறினார்.

உதவி வேளாண் அலுவலர் பாஸ்கர் மக்காச்சோள பயிர்களில் விவசாயிகள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் கலைஞர் திட்டத்தின் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார். மண்ணச்சநல்லூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அபிராமி மண் ஆய்வு செய்து மண்வள அட்டையில் பரிந்துரையின்படி உரம் இடுவதால் செலவு கரிசமாக குறைவதாக உழவன் செயலியின் பயன்கள் குறித்தும் எடுத்த கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சிந்தியா செய்திருந்தார்.