ஈரோடு, ஜூலை 5
ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டாரம், வேளாண்மை – உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டம் மூலம் 2024-25 ஆம் ஆண்டுக்கான உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சியானது மண்ணில் இரசாயன உரங்கள் இடுவதை குறைத்து ஒருங்கிணைந்த நுண்ணூட்டச்சத்துகளை இடுதல் குறித்து திகானரை கிராமத்தில் நடைபெற்றது. இதில் தாளவாடி வட்டார வேளாண்மை அலுவலர் து.விஜய்பாபு தலைமை தாங்கினார்.
இப்பயிற்சியில் கோபிசெட்டிபாளையம், மைராடா-வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி பச்சையப்பன், கலந்துகொண்டு மண்ணில் அதிகப்படியான இரசாயன உரங்கள் இடுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அதை எவ்வாறு முறையாக இடுவது, பாதிப்பை எவ்வாறு நுண்ணூட்ட சத்துக்கள் இடுவதால் குறையும் என்பது குறித்து தெளிவாகவும், விளக்கமாகவும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். மேலும் மண்ணில் நுண்ணூட்ட சத்துகள் இடுவதால் ஏற்படும் பயன், எந்த பயிர்களுக்கு எந்த மாதிரி நுண்ணூட்டகலவைகள் இட வேண்டும் என்பது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினர்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை