November 7, 2024

மண் வள மேம்பாட்டிற்கு மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய பயிற்சி

சிவகங்கை, ஜூலை 19

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாரம், வேளாண்மைத்துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் 2024-2025-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லக்குளம் கிராமத்தில் 18.7.24 அன்று உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி மண் புழு உரம் தயாரிப்பு என்ந தலைப்பின் கீழ் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன், விவசாயிகளுக்கு மண்ணில் கண்ணுக்கு புலப்படக்கூடிய பல வகையான மட்குண்ணிகள் இருந்தாலும் கழிவுப்பொருட்களை மக்க வைப்பதில் மண்புழுக்களே பெரும்பங்கு வகிக்கின்றன. இதனால் மண்ணில் வளத்தை மேம்படுத்துவதுடன் பயிர் விளைச்சலையும் அதிகரித்து நிலைத்த வேளாண்மைக்கு பெரும் பங்கு வகிக்கும். புழுக்களுக்கு இயற்கையிலும் மண்ணிலும் சாகுபடி முறையிலும் அவற்றை பாதிக்கும் காரணிகளும் பல எதிரிகளும் உள்ளன என்று மண் புழு வளர்ப்பு பற்றி எடுத்துக்கூறினார்

இளையான்குடி வேளாண்மை அலுவலர் அழகர்ராஜா, வேளாண்மைத்துறையின் மூலமாக செயல்படுத்தி வரும் மத்திய மற்றும் மாநில திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் மண்ணின் இயற்கை தன்மையை பராமரித்தல், மண் நுண்ணுயிர்களின் செயல்பாட்டினை அதிகரித்தல் கவனமாக இயந்திர ஊடுருவல் இவைகளின் மூலம் மண் வளத்தை நீண்ட நாள் பாதுகாத்தல், மறைமுகமாக பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அங்கககழிவுகள் வழங்கும் இவ்வூட்டச்சத்துக்களை நுண்ணுயிர்களின் உதவியால் பயிர்கள் உட்கொள்கின்றன. இயற்கை (அங்கக) வேளாண் முறையில் கால்நடைகளுக்கு கிடைக்கும் தீவனங்கள் நச்சின்றி இருப்பதோடு மட்டுமல்லமல் கால்நடைகளின் கழிவுகள் வீணாகமல் முறையாக பயன்படுத்தப்படுகிறது.

இப்பயிற்சியில் ரஜேஷ், விவசாய ஆலோசகர், மதுரை, விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் பயன்கள் பற்றி எடுத்துக்கூறினார். மழை காலத்தில் மண் அரிப்பை தடுக்கிறது, தூய்மையான நிலத்தடி நீருக்கும் மண் வள மேம்பாட்டிற்க்கும் வித்திடுகிறது. பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது என்றார்.

இப்பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அங்கக வேளாண்மையானது மண் வளம் மண்ணில் உயிரியல் வாழ்க்கை மற்றும் அவற்றின் செயல்திறனை அதிகரிப்பதோடு சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடாத ஒரு உற்பத்தி முறையாகும் என்று எடுத்துக்கூறினார். இப்பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சதீஸ் மற்றும் சரண்யா ஆகியோர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்திருந்தினர்.