October 11, 2024

மாடித்தோட்ட காய்கறிகள் சாகுபடி செய்யும் செயல் விளக்க பொருட்கள் அடங்கிய பெட்டி வழங்கல்

திண்டுக்கல், ஆக.7

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டம், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான மாடித்தோட்ட காய்கறிகள் சாகுபடி செய்யும் செயல் விளக்க பொருட்கள் அடங்கிய பெட்டி அட்மா திட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் அறிவுரையின் படி இந்த மாடித்தோட்ட தொகுப்புப் பெட்டியில் கட்டர் , காய்கறி விதைகள், கரண்டி காயர் பித் கட்டி போன்றவற்றை ஒருங்கிணைந்த விவசாயிகள் கலைஞர் திட்ட பகுதி விவசாயிகளுக்கு கொடுத்து அதன் பயன்களை பற்றி கூறி வீட்டிலேயே தங்கள் அன்றாடம் தேவைப்படும் காய்கறிகளை மாடியிலேயே போட்டு விளைவித்து பயன்பெறலாம் என கூறி பயனாளி யோகேஷ் பன்றிமலைக்கு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் கார்த்தி உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் , உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜா, காந்திகிராம வேளாண் பல்கலைக்கழக கிராம தங்கல் மாணவிகள் புவனேஸ்வரி, பவானி, அபிதா தேவி , அக்ஷிதா மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு, அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.