February 14, 2025

ரசாயன உரங்களின் பயன்பாடு குறைத்தல் பயிற்சி

ஈரோடு, ஜூன் 25

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை – வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வேளாண் விளை நிலங்களில் இரசாயன உரங்களின் பயன்பாடு குறைத்தல் பயிற்சி குன்றி கிராமத்தில் 24.6.24 அன்று நடைபெற்றது. சு.ராஜேந்திரன், வேளாண்மை கூடுதல் இயக்குநர் (ஓய்வு) பயிர் சாகுபடி செய்வதற்கு முன் மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிட்டால் இரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம் என்றார். கால்நடை மற்றும் பயிர் கழிவுகளை அங்ஙக முறையில் உர மேலாண்மை செய்யும் வழிமுறைகளை விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினார். மதன்குமார், உதவி விதை அலுவலர், உயிர் உரங்கள் உபயோகிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார். வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை தீபாஸ்ரீ, ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் சந்தை படுத்தும் முறை, உழவர் சந்தை பற்றி கூறினார். மேலும் அங்கக வேளாண்மை செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் பயிர் சுழற்சி குறித்து கூறினார். சத்தியமங்கலம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக், அங்கக இடுபொருள் தயாரிக்கும் முறைகள் (பஞ்சகாவ்யா, அமிர்தகரைசல், ஜூவாமிர்தம், மற்றும் பூச்சி விரட்டி) பூச்சி மேலாண்மை, களை மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் அ.வீரமணி, உழவன் செயலி பதிவேற்றம், மற்றும் இ வாடகை, ட்ரோன் மூலம் தெளிப்பு, இ-நாம், கிரைன்ஸ் குறித்து விவசாயிகளிடம் கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை சத்தியமங்கலம்; உதவி வேளாண்மை அலுவலர் யு.மணிகண்டன் செய்திருந்தார்.