October 31, 2024

விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தி பயிர் உற்பத்தியை பெருக்கும் பயிற்சி

சேலம், ஜூலை 11

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி உமையாள்புரம் கிராமத்தில், பயறு வகை பயிர்களில் சான்று பெற்ற விதை நேர்த்தி விதைகளை பயன்படுத்தி உயிர் உற்பத்தியை பெருக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதற்காக டாக்டர் நடராஜன், இணைப் பேராசிரியர், மரவள்ளி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூரில் இருந்து வருகை புரிந்தார். இப்பயிற்சிக்கு அட்மா திட்டத்தின் உறுப்பினர் சிவக்குமார், முன்னிலை வகித்தார்.
பயறு வகை பயிர்களில் சரியான விதைத்தேர்வு, விதை நேர்த்தி பயிர் உற்பத்தி போன்ற அனைத்தையும் விவசாயிகளுக்கு மிகத் தெளிவாக இணை பேராசிரியர் நடராஜன் எடுத்துக் கூறினார். மேலும் இக்கூட்டத்திற்கு டாக்டர் மஞ்சு ரேகா, கால்நடை துறை மருத்துவர், யுவராஜா, உதவி ஆய்வாளர் பட்டு வளர்ச்சி துறை, சுமித்ரா, வேளாண் வணிகத்துறை, ஆகியோர் அந்தந்த துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் ஜான்சி ராணி, தோட்டக்கலை அலுவலர்,
மௌலிதரன் வேளாண்மை அலுவலர், செல்லமுத்து உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் காமராஜ் தோட்டக்கலை உதவி அலுவலர் ஆகியோர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அனைத்து திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். இப்பயிற்சியில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட பணியாளர்கள் கோகிலப்பிரியா, ராஜ்குமார் மற்றும் பிரியங்கா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.