November 7, 2024

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தி்ல் மரக்கன்று தொகுப்பு வழங்கப்பட்டது

விருதுநகர். ஜூன் 22

விருதுநகர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 21.6.24 அன்று நடைபெற்றது. துறை சார்ந்த அனைத்து தலைமை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் கருத்து கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மா இரகங்கள், நெல்லி, சப்போட்டா, பப்பாளி, பலா மற்றும் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், காண்டாமிருக வண்டு தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விவசாயிகள் பயனடையும் வகையில் கருத்துக் கண்காட்சியில் வைத்திருந்தனர்.

தோட்டக்கலைத்துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள், கொடுக்காப்புளி, பழ மரக்கன்றுகள் தொகுப்பு, வீரிய ஒட்டு இரக காய்கறி விதைகள் வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, இராஜபாளையம், விருதுநகர் ஆகிய வட்டார பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.