கிருஷ்ணகிரி, ஜூன் 25
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரம் வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ்(அட்மா) 2024-25ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் (KAVIADP) தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கடேசபுரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த விவசாயிகள் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ஜான் லூர்து சேவியர் தலைமை தாங்கினார். ஸ்ரீதரன் (அதியமான் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் முதல்வர்) கல்யாண சுந்தரம் (பட்டு வளர்ச்சித்துறை) திருவேங்கடம் (தோட்டக்கலை துறை) முருகேசன் (உதவி வேளாண்மை அலுவலர்)
ஸ்ரீகாந்த் (ஊராட்சி மன்ற தலைவர்) மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதியமான் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் முதல்வர் ஸ்ரீதரன் அவர்கள் கூறியதாவது பயிரிடுவதற்கு தேவையான ஊட்டசத்தை முதலில் தீர்மானிக்க வேண்டும்
மண் வளத்தின் நிலவரம் மற்றும் மண்ணின் குறைகளை தீர்க்கக்கூடிய சிறப்பு மேலாண்மை பற்றி முடிவு செய்ய வேண்டும்.
ஊட்டச்சத்து ஆதாரங்களின் இருப்பு பற்றி அறிய வேண்டும்
. விவசாயிகளின் பொருளாதார நிலைமை, ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் பெறக்கூடிய இலாபம் மற்றும்
சுற்றுபுறச்சூழலை கவனத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது
பயிரின் ஊட்டச்சத்து தேவையையும் இயற்கை மற்றும் செயற்கை ஆதாரங்களின் மூலம் ஊட்டச்சத்து அளிப்பையும் ஒருங்கிணைக்கிறது.
பயிர்களுக்கு சமசீர் ஊட்டத்தை அளிக்கிறது.
குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையிலிருந்து வரக்கூடிய எதிர்மறை விளைவுகளைக் குறைக்கிறது
, மண்ணின் இயல், வேதியியல், உயிரியல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
. கார்பன் வெளியீட்டால் மண், நீர், சுற்றுப்புறசூழல் சீர்குறைவதை குறைக்கிறது
. மண்ணில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்கிறது. மேற்பரப்பு நிரீனால் வாயு மண்டலத்திற்கு ஆவியாகும் ஊட்டச்சத்து போன்றவற்றை குறைக்கிறது. மண்ணில் எளிதில் கிடைக்கப் பெறாத ஊட்டங்களை கிடைக்குமாறு செய்கிறது. தேர்ந்தெடுத்த பயிர் ரகங்களைப் பயன்படுத்துதல், சாகுபடி முறை மற்றும் பயிர் அமைப்புத் திட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
உதவி வேளாண்மை அலுவலர் முருகேசன் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பண்ணை கருவிகள், தார்பாலின், பேட்டரி தெளிப்பான், ஜிப்சம், ஜிங்க்சல்பேட் மற்றும் தானியங்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படும் என்று கூறினார்.
உதவி தோட்டக்கலை அலுவலர்
திருவேங்கடம் தோட்டக்கலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள் இலவசமாக வழங்கப்படும் நாற்றுகள், மல்ச்சிங் ஷீட், நீர் சேமிப்பு தொட்டி, 5 வகையான பழ செடி தொகுப்பு மானிய விலையில் கிடைக்கும் என்று கூறினார்.
பட்டு வளர்ச்சித்துறை ஆய்வாளர் கல்யாண சுந்தரம் தமது துறைகள் சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கி கூறினார்கள்.
ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீகாந்த் நம் ஊராட்சிக்கு அளிக்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கா.ம. முஹம்மது ரஃபி மற்றும் பி.பழனிச்சாமி ஆகியோர் உழவன் செயலியின் பயன்கள் மற்றும் உழவன் செயலி விவசாயிகளுக்கு பதிவிறக்கம் செய்தும் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களின் பயன்கள் குறித்தும் விளக்கி கூறினர்.
இப்பயிற்சியில் சொட்டு நீர் பாசன நிறுவனத்தார் கலந்துக்கொண்டனர். விவசாயிகளுக்கு இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது. பாரம்பரிய நெல் ரகங்கள், சிறு தானியங்கள் கண்காட்சி இடம் பெற்றிருந்தது.
இப்பயிற்சிக்காண ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள்
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை