October 11, 2024

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி

கடலூர், ஆக.6

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் இயற்கைவேளாண்மை நண்பர்களுக்கான 5 நாட்கள் (30.07.2024 முதல் 03.08.2024) வரைபயிற்சி நடைபெற்றது. தொடக்க பயிற்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. நடராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து தொழில்நுட்ப விஞ்ஞானிகள், இயற்கை வேளாண்மை பற்றியும், மண்வளம் பேணி காப்பது குறித்தும், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், மண்வளத்தை மீட்டு எடுத்தல், சுற்றுசூழல் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, மண்ணின் ஆரோக்கியம், மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்தும், மண் சேகரிப்பு முறைகள் பற்றியும், இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் தயாரிப்பது குறித்தும், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை மற்றும் பாரம்பரிய விதைகள் தேர்வு குறித்தும் பயிர் மற்றும் கால்நடை ஒருங்கிணைப்பு, பல்வேறு நன்மை பயக்கும் தாவரகளைக் கொல்லிகளின் முறையான பயன்பாட்டினை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கினர். ஒருங்கிணைந்த பண்ணையில், ஆடு, மாடு, வாத்து பல பயிர் சாகுபடி நேரடியாக மாதிரி பண்ணையில் காண்பிக்கப்பட்டது. இயற்கை உற்பத்திக்கான சான்றிதழ் மற்றும் சந்தைப்படுத்துதல், விவசாய முறைகள் மற்றும் விதை அமைப்பு பற்றி கடந்த ஐந்து நாட்கள் எடு த்துரைத்தனர், மேலும் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு மற்றும் அனுபவங்களை முன்னோடி விவசாயி முருகன் அமுதக் கரைசல், பஞ்சகாவ்யம் மற்றும் ஐந்து இலைகரைசல் பூச்சி விரட்டி ஆகியவற்றை செய்முறை மூலம் தயாரித்து காட்டினார். பின் அனைவரும் ஐந்து நாள் பயிற்சி வகுப்பில் கற்றதினை தேர்வு எழுதினர். இப்பயிற்சியில் / முஷ்ணம் வட்டாரத்தை சேர்ந்த 30 மகளிர் சமுதாய களப் பயிற்றுனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.