December 22, 2024

வேளாண்மை துறை திட்டங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு, ஜூலை 9

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் துவரை செயல்விளக்கத்திடல் நாற்று உற்பத்தியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். துவரை விவசாயிகளிடையே மானிய விவரத்தை கேட்டறிந்தார். மேலும் விவசாயிக்கு வழங்கப்பட்ட மானிய விவரங்கள் பற்றியும் நாற்று உற்பத்தி பற்றியும் வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி விளக்கினார். மேலும் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும் பயன்பட்ட விவசாயிகள் மானிய விவரங்கள் மற்றும் பயனடைந்தோர் பற்றிய விளக்கங்களை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். உடன் வேளாண் துறை சார்ந்த சக அலுவலர்கள் இருந்தனர்.