October 31, 2024

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்த்தல் பயிற்சி

ஈரோடு, ஜூலை 18

ஈரோடு வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகளுக்கு ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது. இது குறித்து ஈரோடு மற்றும் சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.மா.சாமுவேல் தெரிவித்துள்ளதாவது.

ஈரோடு வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் கூரபாளையம் வருவாய் கிராமத்தில் உழவர்களுக்கு ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்த்தல் பயிற்சி ஈரோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், சென்னிமலை சாமுவேல் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த விவசாயிகள் பயிற்சியில் வேளாண்மை அலுவலர், சித்தோடு மு.த.ராம்ஜிவன்யா, வேளாண் இடுபொருட்களின் மானிய விபரங்கள், பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார். இந்த விவசாயிகள் பயிற்சியில் தமிழ்நாடு கால்நடைத்துறை ஆராய்ச்சி மறறும் பயிற்சி மையத்தின் சார்பாக டாக்டர் யசோதை கலந்து கொண்டு ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்ப்பதில் ஊட்டச்சத்து பயன்பாடு, நோய்கள் வருமுன்பு காத்தல் போன்ற விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார். முனைவர் டி.ஹரிஹரன் கலந்து கொண்டு ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்ப்பதில் கடன் வசதிகள் பெறும் வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் க.சா.கிருத்திகா, அட்மா திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.