அரியலூர், ஆக.3
அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் விவசாயிகளுக்கான மண்புழு உரம் உற்பத்தி குறித்த பயிற்சி வாழைக்குறிச்சி கிராமத்தில் நடைப்பெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் கலந்து கொண்டு பேசுகையில் மண்புழு உரமானது விவசாயிகளுக்கு மண்ணின் வளத்தை பாதுகாத்து பயன்தரும் வரப்பிரசாதமாக திகழ்கிறது என கூறினார். மேலும் அவர் பேசுகையில் மண்புழுஉரம் இடுவதால் மண்துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி குருணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இதனால் மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீர் பிடிப்புத்திறன் மேம்படுத்தப்படுகிறது. களிமண் பாங்கான மண்ணில் உள்ள குழம்புத் தன்மையைக் குறைக்கிறது. மேலும் மண்அரிப்பு, கோடைக்காலத்தில் மண்ணின் வெப்ப நிலை ஆகியவற்றை குறைத்து வேர்க்காயம் ஏற்படுவதை தடுக்கிறது. வாழை,தென்னை, கரும்பு, பழப்பயிர்கள் குறிப்பாக எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, மா போன்ற பழப்பயிர்கள் கோடையில் முழுமையாக பாதுகாக்க மண்புழு உரம் பெரிதும் பயன்படுகிறது.
மேலும் மழைக்காலங்களில் மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் சத்துக்களைஎடுக்கும் புது வேர்கள் உருவாகமண்புழுஉரம் பயன்படுகிறது. இதனால் பயிர்கள் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மண்புழு உரத்தால் ஏற்படும் அமிலமும் கார்பன்-டை- ஆக்ஸைடு வாயுவும் மண்ணின் காரத்தன்மையைக் குறைத்து உரப்பிடிப்புத் திறனை
மேம்படுத்துகிறது.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை