மதுரை, ஜுலை 26
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தில் மாணிக்கம்பட்டி கிராமத்தில் அங்கக வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி 25.7.24ம் தேதி அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் அலங்காநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில், மத்திய மாநில திட்டங்கள்,கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி தி ட்டம் பற்றியும் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தக்கைப்பூண்டு விதைகள் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது மற்றும் பாரத பிரதம மந்திரி கிசான் நிதி திட்டம், நுண்ணீர்ப் பாசன திட்டம், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல் திட்டம் குறித்து பேசி அனைவரையும் வரவேற்றார். அலங்காநல்லூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் பாலாமணி, இயற்கை வேளாண்மை முறைகள் பற்றியும் அதற்கு வழங்கப்படும் மானியத் தி ட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். ஓய்வு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் இராமன், பேசுகையில் காரீப் பருவத்தில் பயிர் செய்யக்கூடிய பயிர்களுக்கு பஞ்சகாவ்யம், மீன் அமினோ அமில கரைசல்,பசுந்தாள் உரப்பயிர்கள்,இயற்கை பூச்சி விரட்டிகளான இஞ்சி பூண்டு கரைசல், தெர்மோமோர் கரைசல் மஞ்சள் வண்ண அட்டை, விளக்கு பொறி, இனகவர்ச்சி பொறி, இயற்கை திரவ உயிர் உரங்களான திரவ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ரைசோபியம் ஆகியவற்றினை பயன்படுத்தி இயற்கை முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற் றிடலாம் என தொழில்நுட்பக் கருத்துக்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். தோட்டக்கலை உதவி அலுவலர் ஜெயகுமார் கலந்து கொண்டு கலைஞர் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் மானியத்தில் வழங்கப்படும் இடுபொருட்கள், கொய்யா சாகுபடி தொழில்நுட்பங்கள், நெட்டை குட்டை தென்னங்கன்றுகள் குறித்து எடு த்துரைத்து அதனை விவசாயிகள் மானியத்தில் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன் வேளாண் விற்பனைத்துறையில் உள்ள திட்டங்கள் மற்றும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து அதிக இலாபம் பெறலாம் எனவும் விரிவாக எடுத்துக் கூறினார்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை