October 18, 2024

அலங்காநல்லூர் வட்டாரத்தில் சூரியகாந்தியில் களைக்கட்டுப்பாடு மற்றும் ஊடுபயிர் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஆக,1

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தில் அழகாபுரி கிராமத்தில் சூரியகாந்தியில் களைக்கட்டுப்பாடு மற்றும் ஊடுபயிர் குறித்த மாவட்ட அளவிலான

விவசாயிகள் பயிற்சி 31.7.24ம் தேதி அன்று நடைபெற்றது. அதில் 40 விவசாயிகள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் அலங்காநல்லூர் வேளாண்மை உதவி

இயக்குநர் மு.மயில் மண்வள மேலாண்மை பயன்பாடுகள் அதன் அவசியங்கள் மற்றும் மத்திய மாநில திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர்

காப்போம் திட்டத்தின் கீழ் தக்கைப்பூண்டு விதைகள் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது மற்றும் பாரத பிரதம மந்திரி கிசான் நிதி

திட்டம், நுண்ணீர்ப் பாசன திட்டம் குறித்து பேசி அனைவரையும் வரவேற்றார்.

ஓய்வு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் இராமன் பேசுகையில் சூரியகாந்தியில் களைக்கட்டுப்பாடு மற்றும் ஊடுபயிர் நன்மைகள் அதன் முக்கியத்துவம்

குறித்தும் மற்றும் சூரியகாந்தியில் கிடைக்ககூடிய பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து அதிக இலாபம் பெறலாம் எனவும் விரிவாக எடுத்துக்

கூறினார். சூரியகாந்தி பயிர் செய்யக்கூடிய பயிர்களுக்கு பசுந்தாள் உரப்பயிர்கள், இயற்கை பூச்சி விரட்டிகளான இஞ்சி பூண்டு கரைசல்;, விளக்கு பொறி,

இனகவர்ச்சி பொறி, இயற்கை திரவ உயிர் உரங்களான திரவ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் பயன்பாடுகள் ஆகியவற்றின் மூலம்

மண்வளத்தை பெருக்கி அதிக மகசூல் பெறலாம் என தொழில்நுட்பக் கருத்துக்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப உரையாற்றிய அலுவலர்களுக்கும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ப.வேல்முருகன்

நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள், சௌந்தராஜன், வசந்தி செய்து இருந்தினர்.