December 3, 2024

இனக்கவர்ச்சி பொறி உபகரணங்கள் மானிய விலையில் விற்பனை

சேலம், ஜூன் 25

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டாரம், வேளாண்மை துறையின் வேளாண்மை உதவி இயக்குனர் செ.மணிவாசகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தென்னை மர தோப்பு வைத்து பராமரித்து வரும் விவசாயிகளுக்கு தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன் வண்டு கட்டுப்படுத்த தேவையான இனக்கவர்ச்சி பொறி உபகரணங்கள் மானிய விலையில் செயல் விளக்கத்தில் வழங்கப்படுகின்றது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பட்டா நகல் மற்றும் ஆதார் நகல் வேளாண்மை விரிவாக்க மையம், எடப்பாடி வட்டாரத்தில் உதவி வேளாண்மை அலுவலகர் மற்றும் அட்மா திட்ட அலுவலர்களிடம் கொடுத்தும் பயன்பெறுமாறு வேளாண்மை துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.