October 18, 2024

இராமநாதபுரம் வட்டாரத்தில் பெருவயல் கிராமத்தில் சமச்சீர் உரமிடல் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல்

இராமநாதபுரம், ஆக. 2

இராமநாதபுரம் வட்டாரம் பெருவயல் பஞ்சாயத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை – விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ்சமச்சீர் உரமிடல்மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல் விவசாயிகள் பயிற்சிநடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய இராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மா.கோபாலகிருஷ்ணன் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய தி ட்டங்கள், மானிய விபரங்களை உழவன் செயலி மூலம் பதிவு செய்தல் விபரங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படு த்தப்படும் திட்டங்கள் மற்றும் அவற்றின் மானிய விபரங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ச.கண்ணையா முன்னிலை வகித்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பெருவயல் பஞ்சாயத்து விவசாயிகளுக்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளின்
நன்மைகளை விவசாயிகளுக்கு தெரிவித்தார். மண்பரிசோதனை செய்தவதின் முக்கியத்துவம் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) எம்.கே.அமர்லால் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.மேலும் அவர் விவசாயிகள் அனைவரும் தொழில்நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசுல் பெற வேண்டும் என விவசாயிகளிடம் கூறினார்.

இராமநாதரபுரம் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குரர், தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு பி.ஜி.நாகராஜன் தம் விளக்க உரையில், பயிர் சாகுபடியில் களைக் கொல்லி பயன்பாட்டை குறைத்துக் கொள்வதுடன், மண் பரிசோதனை முடிவுகளின்படி தேவையான அளவு உரங்களை மட்டுமே பயிர்களுக்கு அளிக்க கேட்டுக்கொண்டனர்.