November 22, 2024

ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த விவசாயிகள் பயிற்சி

விருதுநகர், ஜூலை 4

விருதுநகர் வட்டாரம், அட்மா திட்டத்தின்கீழ் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி – ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் விருதுநகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கமிலஸ்.சி.லீமாரோஸ் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 2024-25ம்ஆண்டு ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியினை வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் சுமதி, கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் அவர் கூறுகையில், ஒருங்கிணைந்த பண்ணையம், பிஎம்கிசான் விவசாயிகளுக்கு உதவித் தொகை, விவசாய கடன் அட்டை ஆகிய திட்டங்கள் பற்றி கூறினார். வேளாண்மை உதவி இயக்குநர் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் பற்றி கூறினார். விருதுநகர், வேளாண்மை அலுவலர் கிருஷ்ணபிரியா, வேளாண்மைத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பண்ணைக் கருவிகள், கைத்தெளிப்பான் மற்றும் தார்பாலின் மானிய விலையில் வழங்கப்படும் என்பதை கூறினார். இராஜபாளையம், கால்நடை மருத்துவ பல்கலைகழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் டாக்டர் பழனிச்சாமி மற்றும் உதவி பேராசிரியர் டாக்டர் முருகன் கலந்து கொண்டு கறவைமாடு, கோழி, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள், பசுந்தீவன உற்பத்தி, நோய் தடுப்புமுறைகள் பற்றி விளக்கினர். மேலும் கோடை உழவு செய்தல், மண்மாதிரி எடுத்தல், விதை நேர்த்தி செய்தல் மற்றும் உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். விருதுநகர், உதவி வேளாண்மை அலுவலர் பொன்முடி காட்டுப்பன்றி விரட்டி, பற்றி கூறினார். விருதுநகர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் உழவன் செயலி, விவசாயிகள் தங்களது நிலத்தின் மண்ஊட்டச்சத்து நிலையினை அறியும் தமிழ்மண்வளம் என்ற வலைதளம், கோடை உழவு செய்தல், மண்மாதிரி எடுத்தல், பூச்சி நோய் கண்காணிப்பு, சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை அட்மா திட்டப்பணியாளர்கள் செய்திருந்தார்.