மதுரை, ஜூலை 11
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டாரம் மம்சாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் பயிற்சி ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் வெம்பக்கோட்டை தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் மம்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் த.மாரியம்மாள் சிறப்பு விருந்துநராக கலந்துகொண்டார். இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் சுமதி, கலந்து கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையம் தொடர்பாக சிறப்புரையாற்றினார். வேளாண்மை அலுவலர் அண்ணபூரணி, உயிர் உரங்கள் நுண்ணூட்ட கலவை பயன்பாடுகள் மற்றும் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைத்தார். தூண்டில்காளை, தொழில்நுட்ப வல்லுநர், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் மண்வளம் தொடர்பாக பயிற்சியளித்தார். முத்துசரவணன், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, வேளாண் சந்தை மற்றும் மதிப்புகூட்டுதல் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். மாவட்ட தொழில் மையம் சுதாகர், சிறு குறு வேளாண் தொழில்கள் துவங்குவது தொடர்பாக எடுத்துரைத்தார். கருப்பசாமி, உதவி வேளாண்மை அலுவலர், மண் மாதிரி எடுத்தல் மற்றும் தொகுப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெருமாள்சாமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை