April 3, 2025

காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்

திண்டுக்கல், ஆக.9

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டம், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கை முழு மானியத்தில் வழங்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் அறிவுரையின் படி காயர் பித் கம்போஸ்ட் பேக்கை பன்றிமலை முன்ளோடி விவசாயி திலிப்பனுக்கு கொடுத்து அதன் பயன் மற்றும் சாகுபடி முறையினை எடுத்து கூறி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் கார்த்தி, உதவி விதை அலுவலர் பூபதி, உதவி வேளாண்மை அலுவலர் செந்தில், உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜா, காந்திகிராம வேளாண் பல்கலைக்கழக கிராம தங்கல் மாணவிகள் புவனேஸ்வரி , பவானி, அபிதா தேவி, அக்ஷிதா மற்றும் வட்டார தொழில்நுட்ப ¼ மலாளர் சுகன்யா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.