December 3, 2024

கொடுமுடி வட்டாரத்தில் எள் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ஈரோடு, ஆக.7

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின், கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம்; கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இச்சிப்பாளையம் வருவாய் கிராமத்தில் விவசாயிகளுக்கு எள் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை தொழில்நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு மு.ரேகா, தலைமை தாங்கி முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர பயிர் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் பசுந்தாள் உர விதைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் வேளாண் இடுபொருள்;களான உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்களின் மானிய விவரங்களையும் எடுத்து கூறினார். பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய வேளாண் ஆராய்ச்சியாளர் சோபதிங்கள் மணியன் மஞ்சள், வாழை , கரும்பு மற்றும் இதர பயிர் சாகுபடி தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ், துவரை வரிசை நடவு முறைகள் பற்றியும் துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும் விளக்கி கூறினார். மேலும் இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்டப்பணியாளர்கள் செய்திருந்தனர்.