October 18, 2024

சிறுதானிய பயிர்களில் மதிப்புக்கூட்டுதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

கன்னியாகுமரி, ஜூலை 30

தமிழ்நாடுஅரசு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தினையும் பொருளாதாரத்தையும் முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்த பகுதிகளில் விளையும் பொருள்களை தரம் உயர்த்தி விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க செய்திடும் வகையில் சிறுதானிய பயிர்களில் மதிப்புக்கூட்டல் என்ற தலைப்பில் மேல்புறம் வட்டாரம் மருதங்கோடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி 29.7.24 அன்று நடத்தப்பட்டது. மருதங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் சு.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேல்புறம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுய. சந்திரபோஸ் சிறப்புரையாற்றி சிறுதானிய பயிர்களின் நன்மைகள் குறித்தும், அதன் மருத்துவ பயன்கள் பற்றியும், ஒவ்வொரு சிறுதானிய பயிர்களையும் எவ்வாறு மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம் என்பது பற்றியும் விளக்கி கூறினார். வு. ராஜ்பிரவீன், இணை பேராசிரியர் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் கலந்து கொண்டு சிறுதானிய பயிர்கள் குறித்தும் மதிப்புகூட்டுதல் பற்றியும் எடுத்துக்கூறினார். துணை வேளாண்மை அலுவலர் நாகராஜன் வேளாண் சார்ந்த பல்வேறு திட்டங்கள்கு றித்துவிவசாயிகளுக்குஎடுத்துக்கூறினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் சஜீலா, உழவன் செயலியில் உள்ள வசதிகள் மற்றும் அதனை உபயோகிக்கும் முறைகளை குறித்து கூறியதோடு இயற்கை விவசாயம் குறித்தும் விளக்கினார். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் உணவு வழங்கப்பட்டது. முடிவில் மேல்புறம் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் பீ.நௌபியா நன்றியுரை கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மேல்புறம் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் திரு.ஷைஜீ, மல்லிகா ஆகியோர் செய்தி ருந்தனர்.