October 18, 2024

தக்காளியைத் தாக்கும் புள்ளிவாடல் நோய்

தக்காளியை பல்வேறு வகையான நோய்கள் தாக்கினாலும் புள்ளிவாடல் நோயானது மகசூலை குறைப்பதோடு மட்டுமல்லாமல் சந்தையிலும் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படு த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை பல்வேறு வகையான காய்கறி பயிர்களையும் தாக்குகின்றது. இந்நோயான துடாஸ்போ வகையைச் சேர்ந்த நச்சுயிரி கிருமியினால் உண்டாகிறது. இந்நச்சுயிரியை இலைப் பேனானது ஓரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்புகின்றது.

புள்ளிவாடல் நோயானது இலை,தண்டு மற்றும் காய்களை தாக்குகின்றன. பாதிக்கப்பட்ட இலைகளில் முதலில் பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும். பின்னர் இலைகளின் விளிம்புகளில் வெங்கல நிறத்தில் கருகல் காணப்படும். நாளடைவில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பழுப்பு நிறத்தைஅடைந்துபின்னர் காய்ந்துவிடும். பாதிக்கப்பட்ட செடிகளானது வளர்ச்சியடையா மல் குட்டையாக காணப்படும் . புள்ளிவாடல் நோய் தாக்கப்பட்ட பழத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வளையங்கள் காணப்படும். இதனால் சந்தை வாய்ப்பு குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்நோயைக் கட்டுப்படுத்தநோய் தாக்கிய செடிகளை வேரோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும். இதனால் மற்ற செடிகளுக்கு நோய் பரவாமல் தடு க்கலாம். இந்நோயை இலைப்பேன்கள் பரப்புவதால் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு எக்டேருக்கு இமிடாகுளோபிரிட் 120 மிலி அல்லது மீதைல் டெமட்டான் 500 மிலி மருந்தினை கைத் தெளிப்பான் கொண் டு காலை அல்லது மாலை வேலைகளில் தெளிக்கவும். வரப்பை சுற்றி சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை 5 முதல் 6 வரிசைகள் பயிரிடுவதன் மூலம் இலைப்பேன் தாக்குதலை குறைக்கலாம்.ஓரே மருந்தினை திரும்ப திரும்ப தெளிக்காமல் மருந்துகளை சுழற்சி முறையில் தெளிக்க வேண்டும்.மேலும் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு அதிகமாகவோகு றைவாகவோ பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்ககூடாது.

இதனை முனைவர் ந.இரஜினிமாலா,இணைப் பேராசிரியர் (பயிர் நோயியல்),நெல் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகம், அம்பாசமுத்திரம் – 627 401, தி ருநெல்வேலி தெரிவித்தார்.