கோயம்புத்தூர், ஆக.2
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி இம் மாதத்திற்கான பயிற்சி, 5.8.24 திங்கட்கிழமை அன்று காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
பயிற்சியில் கலந்து கொள்ளவிழைவோர், பயிற்சி நாளன்று, பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) நேரிடையாக செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், தொலைபேசி : 0422-6611336, 6611226,
மின்னஞ்சல்: ஸ்ரீழிமிஜுலியிலிஆதீ@மிஐழிற்.ழிஉ.ஷ்ஐ தொடர்பு கொள்áலாம்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை