திருச்சி, ஆக.3

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி யாகதிருச்சி மாவட்டம், வையம்பட்டி வட்டாரத்தில் உள்ள அரசு நிலைப்பாளையம் கிராமத்தில் நெல்லில் தரமான விதை உற்பத்தி பற்றிய களப்பயிற்சியானது 31.7.24 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் 30 விவசாய பெண்கள் மற்றும் விவசாயிகள் பங்கு பெற்று பயனடைந்தனர். இப்பயிற்சியில் தரமான விதையின் குணாதிசயங்கள், விதைதேர்வு, விதைநேர்த்தி, வயல்தேர்வு, ஒருங்கிணைந்தஉரநிர்வாகம், கலவன்அகற்றுதல், அறுவடை, சுத்திகரிப்புமற்றும்விதைசேமிப்புபற்றிவிளக்கமாக பேராசிரியர் முனைவர் ந.புனிதவதி, (விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை) எடுத்துரைத்தார். மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விதைஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள விதை அமிர்தம் கொண்டு விதைநேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு 15 மில்லி விதை அமிர்தம் சேர்த்து நன்கு கலந்து பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும் என்பதனையும் அறிவுறுத்தி னார். இவ்வாறு விதைகளை விதைநேர்த்தி செய்வதன் மூலம் முளை குருத்து வெளிவருவதை துரிதப்படுத்தலாம் எனவும், முளைப்புத்திறன் 8-10% அதிகரிக்கப்படுகிறது எனவும், பக்க வேர்களின் எண்ணிக்கையைஅ திகரிக்கிறது எனவும் எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் விதை குழும திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் வை.சரவணகுமார் உதவி புரிந்தார்.