October 18, 2024

தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

ஈரோடு, ஜூலை 1

ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரம், சென்றாயம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்ட கரும்பு நுண் நீர்ப்பாசன (ளுரடி ளுரசகயஉந) வயலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். கரும்பு வயலில் பூமிக்கு அடியில் குழாய் பதித்து அதன் மூலம் சொட்டு நீர் பாசனம் செய்யப்பட்ட வயலை ஆய்வு செய்து அதன் நன்மைகள், வழங்கப்பட்ட மானியம் ரூ.2,48,796ஃ- குறித்து விவசாயி மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் யுவுஆயு திட்டத்தின் கீழ் செயல் விளக்கம் – ரூ.4,000/- மதிப்புள்ள காட்டுப்பன்றி விரட்டி (றுடைன டீழயச சுநிநடடநவெ முவை) மற்றும் காய்கறி பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொகுப்பு (ஐNஆ முஐவு) – பொருட்கள் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கினார்.

ஆய்வின் போது தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இரா.கார்த்திகேயன், வேளாண்மை அலுவலர் சந்தியா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர் சசிக்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.