October 18, 2024

தென்னை நார்கழிவிலிருந்து உரம் தயாரிக்கும் பயிற்சி

இராமநாதபுரம், ஜூலை 15

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் தென்னை நார்கழிவு உரமாக்குதல் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் தென்னை நார்கழிவில் உரம் தயாரிப்பு குறித்து, உச்சிப்புளி வட்டார அரியமான் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லெட்சுமி காயர் உரிமையாளர் சக்தி கணேஷ் கூறியதாவது, தென்னை நார்க்கழிவு மட்கு உரம் தயாரித்தல் தொடர்பாக மூலப்பொருட்களை சேகரித்தல், உரக்குவியல் அமைத்தல், ஈரப்பதத்தை தக்கவைத்தல், மக்கிய உரம் சேகரிக்கும் முறை,
மட்கிய தென்னை நார்க்கழிவின் பயன்கள் குறித்து விளக்கம் கூறினார்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ் கூறியாதவது. வேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF) மற்றும் பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை
முறைப்படுத்தும் திட்டத்தின் (PMFME) திட்ட பயன்கள்,.தகுதிகள், தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி விவசாயிகளிடம் மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் மற்றும்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். மேலும் உழவன் செயலியின் பயன்பாடு,
அங்கக விவசாயிக்கான நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் 30 அக்டோபர் 2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் விளக்கி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உச்சிப்புளி வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.