திருச்சி, ஜூலை 4
குஐராத் மாநிலத்தைத் தலைமை நிலையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதுல் நிறுவனம் வேளாண் சார்ந்த இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் தலைசிறந்து விளங்கும் ஒரு நிறுவனமாகும். அதுல் நிறுவனத்தின் 78 ஆம் ஆண்டு துவக்க விழாவினையொட்டி இந்தியா முழுவதும் சுமார் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டு அதனை செயல்படுத்தி வருகின்றனர். மேலும் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் நாட்டின் பசுமை வளர்ச்சிக்கு உறுதுனையாகவும் இருக்கிறார்கள். இந்த ஒரு இலட்சம் மரக்கன்றுகள் ஒரு நாளில் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ ரம்யா வேளாண் இடுபொருள் விற்பனையாளர் சி.சின்னத்துரை தலைமையில் 300 மாமரக் கன்றுகளும், 200 வனம் சார்ந்த மரக்கன்றுகளும் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள நாளந்தா வேளாண்மைக் கல்லூரியில் உள்ள வேளாண் பண்ணையில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதன்படி ஐூலை 3ஆம் தேதி அன்று மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வு நாளந்தா வேளாண்மைக்கல்லூரி மாணவர்களின் பங்களிப்போடு ரம்யா வேளாண் இடுபொருள் விற்பனையகமும் அதுல் பவுண்டேசன் நிறுவன விற்பனை பிரிவு மேலாளர் ஆ.டீ.மகாதீர், பங்களிப்போடும் செயல்படுத்தப்பட்டது. இதில் ஊ.பாலசுப்பிரமணி, பகுதி மேலாளர் மற்றும் னு.மணிவண்ணன், துணை பகுதி மேலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி நாளந்தா வேளாண்மை கல்லூரியின் முதல்வர் போராசிரியர் சி.சேகர் தலைமையில் நடைபெற்றது. முதல் மரக்கன்று நடவை அல்லி இங்கர்சால் நட்டு துவக்கி வைத்ததோடு மட்டுமல்லாமல், தேவையான வசதிகளையும் செய்து கொடுத்து பசுமைப் பரப்பளவு பெருக்குதலில் நாளந்தாவின் பங்கும் உண்டு என்பதை எடுத்துரைத்தார். அதனையொட்டி, அதுல் நிறுவன விற்பனையாளர் சி.சின்னதுரை, நிறுவன பகுதி அலுவலர்களும் மரக்கன்றுகளை நட்டு பசுமைப் பரப்பின் விரிவாக்கத்தில் வேளாண் கல்லூரி மாணவ மாணவியர்களின் பங்கு வருங்காலங்களில் பெரிதளவு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். நிறைவாக, ஜீலை 3-ஆம் நாளன்று இந்தியா முழுவதும் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு அந்த நாளின் நிறைவில் 1.17 இலட்சம் மரக்கன்றுகள் வெற்றிகரமாக நடப்பட்டு, இலக்கைத் தாண்டிய சேவையில் அதுல் நிறுவனத்தின் பங்களிப்பு பாராட்டிற்குரிய ஒன்றாக உள்ளது. எனவே, நாமும் இதுபோன்ற செயலாக்கத்தில் இணைவோம். மரங்களை காப்போம். மண்வளம் மேம்படுத்துவோம். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.