மதுரை, ஜூலை 2
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் “நெல் மற்றும் பயறுவகை பயிர்களில் உயர் விளைச்சல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய நிலையப் பயிற்சி 2.7.24 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைர், இ.சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் நோக்கங்கள், முக்கியத்துவம், திட்டங்கள் மற்றும் பயன்கள் குறித்து உரையாற்றினார். மேலும் இப்பயிற்சியில் நெல் மற்றும் பயறுவகை பயிர்களில் உயர் விளைச்சல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி இவ்விழாவில் வேளாண்மை விரிவாக்க கல்வி இயக்குநர் முனைவர், பி.பொ.முருகன், தலைமையுரையாற்றி விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு இடுபொருட்களான நெல் (ADT 54), குதிரைவாலி (MDU1), உளுந்து (வம்பன் 11) விதைகள் மற்றும் தீவனப்புல் கரணை போன்றவை விரிவாக்க கல்வி இயக்குநர் முனைவர் பி.பொ.முருகன் அவர்களால் வழங்கப்பட்டது. இவ்விழாவில் 40க்கும் மேற்பட் ஆதிதிராவிடர் விவசாயிகள் கலந்து கொண்டு நெல் மற்றும் பயறுவகை பயிர்களில் உயர் விளைச்சல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்துகொண்டார். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகள், திட்ட உதவியாளர்கள், பண்ணை மேலாளர் மற்றும் அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியாக முனைவர் கி.சுரேஷ், இணைப் பேராசிரியர் (பூச்சியியல்) நன்றியுரையாற்றினார்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை